பக்கம் எண் :

298

தமிழ்நாட்டைத் தன் பரப்பளவால் விழுங்கிக் கொண்டிருக்கின்ற - எல்லாருள்ளத்திலும் இடம் பெற்றுள்ள கோயில் என்பது என்ன என்பதை ஆராய வேண்டும். கோயில் என்ற சொல் எதைக் குறிக்கிறது? அரசனிருந்து முறை செய்யும் பெருமனைக்குக் கோயில் என்று பெயர். “மறத்துறை விளங்கிய மன்னவன் கோயில்” என்ற சிலப்பதிகார அடியைப் பார்க்க. இன்றைக்குத் தமிழன் கோயிற் கடவுளுக்கு என் சொத்தையெல்லாம் ஒப்படைப்பேன் என்று குறிக்கிறான்! பார்க்கிறோம்.

திருமூலர் சொல்வதைக் கேளுங்கள்!

“கொடியசைக்கின்ற இந்தக் கோயிற் கடவுளுக்கு நீங்கள் ஒன்று செய்தால் நடமாடுகின்ற அந்தக் கோயிற் கடவுளாகிய மக்களுக்கப் பயன்படாதே. நடமாடுகின்ற அந்த ஏழை மக்களுக்கென்று செய்தால் கொடியசைக்கின்ற அந்தக் கோயிற் கடவுளுக்குச் செய்ததாகிவிடுமே.”

“படமாடக்கோயில் பரமற்கு ஒன்று ஈயில்
நடமாடக்கோயில் நம்பர்க்கு அஃது ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பரமற்கு அஃது ஆமே”

என்பதைத் திருமூலர் திருமந்திரத்தில் காண்க.

“ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லாத வர்க்கு”

என்ற வள்ளுவர் குறளை அறிந்தவர்கள் அருவ வணக்கத்தையும் ஒப்புவரோ? ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறள் செய்த வள்ளுவர் இன்று வானளாவியுள்ள கோயில்களைப் பற்றி ஒரு சொல் சொன்னதுண்டா? விரிப்பிற் பெருகும். இந்நாட்டில் உள்ள உண்மைச் சமயமும், உண்மைச் சமய நூல்களும் சாதியை எண்ணியதேயில்லை. இந்நாட்டில் உறுதி பயக்கும் என்று சொல்லப்படும் நெறிகள் இரண்டு; ஒன்று வைதீக நெறி. மற்றொன்று