4 ஜாதி ஆபத்து எம்டன் கப்பல் வரவு
மகாயுத்த ஆரம்ப காலத்தில் புதுவைத் துறைமுகத்தில் எம்டன் என்னும் செர்மனிக் கப்பல் வந்ததற்காகப் புதுவை வாசிகளில் ஏழைகளும் பணக்காரருமாகப் பலபேர்கள் குடும்ப சகிதம் மேற்கில் பத்துப் பதினைந்து மைல் தூரமுள்ள கிராமங்களுக்குப் போய்விட்டார்கள். அதிலொரு கிராமம் கூனிச்சம்பட்டு. கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தங்களூரை நோக்கி அஞ்சி ஓடிவரும் புதுவை வாசிகளை வரவேற்று, அவர்கள் தங்கிச் சமையல் செய்து கொள்ளத் தாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே இடம் கொடுத்தனர். கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தம்மை நாடிவந்தவர்கள் அனைவரும் மொத்தத்தில் பட்டினவாசிகள் என்று கருதினார்களேயன்றி அவர்களில் இவர் இன்ன ஜாதி என்பதை நினைக்கவில்லை. பட்டினவாசிகளும் தங்களுக்கத் தங்க இடம் கொடுத்தவர்களும் இன்னவர் இன்ன ஜாதி என்பதை அலசிப் பார்த்துத் தத்தமக்கு ஏற்ற ஜாதிக்காரர் வீட்டில் தங்கினதாகவும் சொல்லமுடியாது. எனவே கூனிச்சம்பட்டில் புதுவை வாசிகள் தங்கியிருந்த வரைக்கும் தமது ஜாதிப் பைத்தியத்தினின்று நீங்கிச் சமத்துவ வாழ்வு வாழ்ந்தனர். வாசகர்கட்கு நன்றாய் ஞாபகமிருக்கட்டும்; புதுவை வாசிகள் இரண்டொருநாள் கூனிச்சம்பட்டியில் சமத்துவமாயிருக்க ஜெர்மனிக் கப்பல் புதுவைத் துறைமுகத்துக்கு வரவேண்டியிருந்தது! அக் கப்பல் மறுநாள் போய்விட்டது! போய்விட்ட செய்தி கூனிச்சம்பட்டிலிருந்த புதுவை வாசிகளுக்கு நிச்சயப் |