பக்கம் எண் :

34

5
குழந்தை இந்தியா


பிரஞ்சு - இந்திய சர்க்கார் பாடசாலைகளில் ஒரு பாடசாலை. விளையாட்டு மணி அடித்தது. பிள்ளைகள் அனைவரும் விளையாடும் இடத்தையடைந்தார்கள். ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகளும் ஒவ்வொருவித விளையாட்டு -ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளுக்கு ஏறினது ஏழு வயது. அவர்களில் பெண்களும் ஆண்களும் கலந்திருந்தனர். அவர்கள் தமது விளையாட்டு நேரத்தில் மணல் வீடு கட்ட ஆரம்பித்தார்கள்.

அதற்குள் ஒருவன் சொல்லுகிறான்:-

“வாத்தியார் சற்று நேரத்திற்குமுன் நமக்கு இந்தியா படம் எழுதிக் காட்டினாரே! அதில் ஊர்கள் எழுதினாரே! ஊர்களில் தெருக்கள் அமைத்தாரே! தெருக்களில் வீடுகள் கட்டினாரே! அதுபோல் போட்டு அதற்குள் நாம் விளையாடலாம். பெரியதாய் ஓர் இந்தியா கிழிக்க வேண்டும் (மணலில் எழுத வேண்டும்)

இதற்கு எல்லாரும் ஒத்துக் கொண்டார்கள். கோடுகள் கிழித்தார்கள். ‘குழந்தை இந்தியா’ நிர்மாணிக்கப்பட்டது. எல்லாரும் குழந்தை இந்தியாவில் குடியேறினார்கள். அதில் அவர்கள் குடியேறுமுன் அவர்கட்கு அசல் இந்தியர் என்றல்லவா பெயர்? அந்த அசல் இந்தியர் 40 பேராவார்கள். அவர்களில் பிராமணர், வேளாளர், நாயகர், நாயுடுகார், பறையர் முதலிய ஜாதிப் பிள்ளைகளும், கிறிஸ்தவர், முகம்மதியர் முதலிய பிள்ளைகளும் கலப்பு. அசல் இந்தியாவின் குறிப்பில் கண்ட பெயர்