6 பொருக்கு மணிகள்
(கிறுக்கன் பொறுக்கியது) “சைவ சமயம் தொன்மையிற் சிறந்து விளங்குதலைக் கொண்டு அதனைப் போற்ற வேண்டுமென்று வலியுறுத்துவது அறிவுடைமையாகாது. மேன்மக்கள் தொன்மையைக் கருதி ஒன்றைக் கொள்ளவும் மாட்டார்கள்; புதுமை கருதி ஒன்றைத் தள்ளவும் மாட்டார்கள். அவர்கள் ஒன்றை அறிவால் அளந்து ஆராய்ந்து அதன் உண்மைகாணவே முயல்வார்கள். ஆராய்ச்சிக்கு அருகதையாக நிற்பது தொன்மையதாயினுமாக; புதுமைதாயினுமாக. வேண்டற்பாலது ஒன்றே! அது பொருளுண்மை.” - திரு. வி. கல்யாணசுந்தரம் “புராணங்கள் என்பன இறைவன் தன் வரம்பில் ஆற்றலையும் தன்னை நினைத்துருகும் அடியாரைக் காத்ததற்கு அவன் செய்த அருட்டிறங்களையும் உயர்ந்த அறிவு இல்லாப் பொதுமக்கட்கு உணர்த்தல் வேண்டி இரக்கமுள்ள சான்றோரால் கட்டி வைக்கப்பட்ட பழைய கதைகளை உடையனவாகும்.” - சுவாமி வேதாசலம் “இந்து மதத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. நீ இந்துவாக இருந்து கொண்டே நாஸ்திகனாகக் கூட இருக்கலாம். ஒரு ஹிந்து எந்தக் கொள்கையையும் பின்பற்றலாம்.” - சத்யேந்திரநாத், டர்கூர் I.C.S. |