8 “ஊழ்”
சில சமயங்களில் எளியவனை வலியவன் நலிவு செய்யும்போது அந்த எளியவன் ஒன்றும் பேசாதிருக்க ஆக்கினையிடுவதாக அடே! ஊழ், ஆழ் என்றால் உதைப்பேன் என்பதுண்டு. இதனால் ஊழ் என்ற வார்த்தை நம்மவர் அதிகமாய்ச் சொல்லி வருவது விளங்கும். எடுத்ததற்கெல்லாம் ஊழ் என்பது நம்மவரின் பலநாள் வழக்கம் போலும்! அன்றியும் ஊழ் என்ற வார்த்தை பழந்தமிழ் நூற்களிலும் காணப்படுகிறது. நூற்களில் வழங்கிய ஊழ் வழக்கிலும் உண்டு. ஊழ் என்பது முன்ஜென்மத்தில் செய்த வினைப்பயன் என்ற பொருளில் வழங்குவது. ஆனால் இப்படிப் பொருள்படுவது இடையில் சிலரால் பொருத்தப் பட்டதே. ஊழ் என்பதன் சொந்த அர்த்தம் ‘கடைசி’ என்பதே யாகும். ஊழ்-ஊழி-ஊழிக் காலம் என்பவற்றில் கடைசி யென்பதே பெறப்படுவது காண்க. -புதுவை முரசு, 16-2-1931 * |