10 சீர்திருத்தக்காரர்களின் கஷ்டம்
உலகின் சீர்திருத்தத்தையொட்டியே உலக முன்னேற்றம் ஏற்படும். சீர்திருத்த முயற்சி இல்லாவிடினும் உலகம் ஒவ்வொரு நிமிஷமும் சீர்திருத்த மடைந்து கொண்டுதான் போகும். உலகில் ஒரு மூலை நன்னிலையில் இருப்பதை மற்றோர் மூலையிலுள்ள மக்கள் கண்டு தாமும் நன்னிலை அடைய வேண்டும் என்று எண்ணுமிடத்துச் சீர்திருத்தம் வேண்டப்படுகிறது. அப்படி வேண்டப்படும் சீர்திருத்தமானது முயற்சியற்ற நிலையில் தானே நடக்கும் என்று சும்மா இருப்பதில்லை. சிலர் முயன்று சீர்திருத்தத் துறை நோக்கி மக்களை விரைவுபடுத்துவார்கள். இவர்கட்குச் சீர்திருத்தக்காரர்கள் என்று பெயர். இன்றைய உலகில் சீர்திருத்த உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அளவு இதற்குமுன் ஒருநாளும் இருந்ததில்லை. எங்கணும் சீர்திருத்த முயற்சியே தலைதூக்கியுள்ளது. உலக மக்களின் இன்ப வாழ்வுக்குச் சீர்திருத்தமே அடிப்படை என்பதை அனைவரும் கண்டு கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆயினும் சீர்திருத்தவாதிகட்கு ஏற்படும் கஷ்டங்களில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, மற்ற துறைகளில் உழைப்பவர்க்கு ஏற்படுவதில்லை. இங்கு நுணுகி ஆராய வேண்டியது என்னவென்றால் பழைய வழக்கத்திற்குக் கட்டுப்பட்ட மனிதன் அந்தப் பழக்கவழக்கத்திற்கு அப்புறப்பட்ட எவ்வகை இனிய முறைகளையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறான் என்பதே. பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, ஆப்கானிஸ் |