பக்கம் எண் :

50

11
டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்?


கால் வீங்கி விட்டால் அந்தக் கால்போல் வெள்ளியால் செய்து, கடவுளுக்குச் செலுத்துகிறேன் என்பார்கள். கடவுளின் பெயரால் அந்த வெள்ளிக் காலை அபகரிக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. கடவுள்மேல் பாரத்தைப் போட்டு நாளைக் கழித்ததால், கால்வீக்கம் அதிகரிக்க குற்றுயிரும் குறைப்பிணமுமாய்த் தங்களிடம் வந்து உயிர்ப்பிச்சை கேட்பதை அறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? சுயமரியாதை, மூடநம்பிக்கை வேண்டாம் என்றுதானே சொல்லுகிறது. காது செவிடாயிருந்தால் சமாதியைச் சுற்றி வந்து காணிக்கை செலுத்தினால் தீர்ந்துவிடும் என்பார்கள். சமாதிக் குருவின்பேரால் மக்களிடைக் காசைப் பறிக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. காது மத்திமத்திற்கு உடனே செய்ய வேண்டிய சிகிச்சையை யறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்?

சுயமரியாதை, “செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென எண்ணியிருப்பார் - பித்தமனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாம் (பாரதி) என்றும், செத்துப்போன மனிதனால் உயிரோடிருக்கும் மனிதனுக்கு ஆவதொன்றுமில்லை யென்றுந்தானே சொல்லுகிறது?

பெண்களுக்கு ஏகதேசம் ஏற்படும் மயக்கத்தைப் பேய் பிடித்ததாய் எண்ணி மந்திரவாதி என்பவனை