12 துக்கடா - பக்கடா
கிறுக்கன் கூறுவது டில்லியில் காந்தி - இர்வின் சாம்பாஷணை நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ‘கடவுளை’ப் பற்றி நமது காந்தி அவர்கள் ஓர் புதிய மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். அதாவது “சூரியன் இருப்பது எப்படி உண்மையோ, கடவுள் இருப்பது (? )காந்தியும் - கடவுளும் எப்படி உண்மையோ அதைப்போல் டாஷ் டாஷ் டாஷ்’’ ’ ’ என்று கூறியிருப்பதாகப் பத்திரிகைகளில் நான் படித்தேன். ‘கடவுள் இருப்பது எப்படி உண்மையோ அதைப்போல’ என்று அவர் கூறிவிட்டுப் பிறகு அவர் என்னென்னவோ இயம்பியிருந்தார். அதன் பிறகு அவர் என்ன சொல்லியிருந்தாலும் இருக்கட்டும். அதைப்பற்றி நான் இங்கு விஸ்தரிக்கவோ குறிப்பிடவோ விரும்பவில்லை. கடவுளுக்கும் ‘சூரிய’ னுக்கும் ஒற்றுமைகாட்டி அவர் பேசியிருப்பதை மட்டில் நான் இங்கு எடுத்துக் கொள்கிறேன். சூரியன் இருப்பது எப்படி உண்மையோ, அதைப்போல கடவுளும் இருக்கிறார் என அவர் குறிப்பிட்டிருப்பதை எண்ண எனக்குச் சிரிப்பும் காந்திஜியின் அறிவுக்கு அநுதாபமும் ஏற்படுகின்றன. சூரியன் இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. ஏனென்றால் அது காணக் கிடக்கும் பொருள். ஆனால் ‘கடவுள்’ இருக்கிறார் என்பதிலும் அப்படியா? கண்ணுக்குப் புலனாகக் காணோம்; மனதுக்கும் எட்டக் காணோம். இப்படியல்லவா ஓர் கடவுள் இருக்கிறது? இது சாமானியருக்குக் கூடவா விளங்கும்? இப்படியிருக்கும்போது சூரியனோடு |