பக்கம் எண் :

58

முதலாவதாக ஓர் முக்கிய விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது ஜீவப் பிராணிகள் செய்த கர்மத்தின்படியே பலனை யடைந்து வருகின்றன - வருகின்றனர் என்று சாஸ்திரங் கூறுவதாக நான் எப்பொழுதோ படித்த ஞாபகம். அது உண்மையானால் (ஆஸ்திகர்கள் தடையில்லாமல் அதை ஒப்புக் கொள்ளவே வேண்டும்) கடவுளிடம் பிரார்த்திக்க முயல்வது தப்பென்றே ஏற்படுகிறது. ஒவ்வொருவருடைய பிறப்பிலிருந்து இறப்பு வரை இன்னவிதமாக இருப்பார் எனக் ‘கடவுளே’ தலையில் எழுதிவிடுகிறார். அப்படி இருக்கும்போது (நான் நம்பவில்லை. ஆஸ்திகர்கள் நம்பித்தானாக வேண்டும்) கடவுளிடம் பிரார்த்திக்கப் புகுவது கர்மத்தை நம்பாததையும் கடவுள் கருத்தை உணர்ந்து நடவாததையுமன்றோ மெய்ப்பிக்கின்றன. எனவே என் போன்றவர்களை நாஸ்திகர் என்று கூறும் இந்த ‘அறிவாளிகளே’ பிரத்தியக்ஷமான நாஸ்திகர்களாக இருக்கிறார்கள் என்பதை நண்பர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். (என் போன்றவர்களை நாஸ்திகர் என்று அவர்கள் கூறுவதைப் பற்றி எனக்கு வருத்தம் ‘கிருத்தம்’ கிடையாது. ஆனால் அளவிறந்த ஆனந்தமே அடைகிறேன். ஆனால் அவர்கள் ‘சூஸ்திரர்களா’ கநடந்து கொண்டு என் போன்றவர்களை நாஸ்திகர்கள் என்று கூறுலே சரியாகும் என்பது என் கருத்து) அது நிற்க. இறவாமலிருக்கக்கோரி அவர்கள் பிரார்த்திக்கிறார்களே அவை பலித்திருக்கின்றனவா என்பதைப் பற்றி இனிக் கவனிப்போம்.

லண்டன் சர்வகட்சி மகாநாட்டுக்குச் சென்றிருந்த மௌலானா முகமதலி பிணிவாய்ப்பட்டிருந்தபோது, இந்தியாவில் உள்ளவர்களில் அநேகர் மௌலானா முகமதலி பிணியினின்று நீங்கும்படி திருக்கருணை பாலிக்க வேண்டும் எனக் கோரி, செய்து கொண்ட பிரார்த்தனைகளும் மந்திரங்களும் படைப்புகளும் அநேகம். அவ்வண்ணமாக எவ்வளவோ தயவாகக் “கடவுளை’ப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தும் அந்தக் ‘கருணாநிதியாகிய கடவுள்’ முகம