13 திரும்பிப்பார்! முன்னேறு!
திருந்திய வயற்புறத்தில் திருந்தாத காட்டு நிலத்தைக் காணுகிறோம். அந்தக் காட்டு நிலம்போல் ஒரு காலத்தில் இத்தனை பெரிய உலகமும் இருந்தது. அப்போது ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தைச் சந்திக்கவும் வசதியில்லை. இதனால் ஒருவன் தனக்குள்ள அறிவானது வளர்ச்சியடையாத நிலையில் இருந்தான். அதன் பின் ஒரு வீதியினர் மற்றொரு வீதியினரைக் கலந்து கொள்ளும்படி, பாதைகள் ஏற்பட்டன. பாதைகள் சீர்திருத்தச் சீர்திருத்தக் கிராம மக்கள் மற்றொரு கிராமத்து மக்களிடம் சம்பந்தம் அடைந்தனர். இந்த நிலையில் மக்களோடு மக்கள் சம்பந்தம் பெருகப் பெருக மக்களறிவு பெருகிற்று. ஒரு கிராமம் மற்றொரு கிராமத்தை மாத்திரம் அறிய முடிந்த அந்நாளில் பொதுமக்கள் அறிவு எவ்வாறு இருந்தது? ஒரு மாகாண பெருமக்கள் மற்றொரு மாகாணப் பெருமக்களிடம் சம்பந்தமடைந்த நடுக்காலத்தில் பொதுமக்கள் அறிவு எவ்வாறு இருந்தது? தேசப் பெருமக்கள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற நிலையில் வந்த இந்நாளில் தேசப் பெருமக்களின் அறிவு விசாலமுடையதே யாகும். பண்டைக் காலத்தில் ஓரிடத்தில் வாழ்ந்த ஒரு நூறு மக்கள் கல்லைக் கல்லோடு மோதிக் கல்லுடைத்துக் கல்லின் கூரான பாகத்தால் கிழங்கு தோண்டியுண்டும், மற்றோரிடத்து மற்றொரு நூற்றுவர் கரும்பைக் கையா |