பக்கம் எண் :

62

போது உலக சம்பத்து உண்டாகும். உலகத்தின் லக்ஷியம் உலக சம்பத்தையடைவதே. தேச சம்பத்தானது உலக சம்பத்தை லக்ஷியமாக உடையது.

இதனால்தான் நான், ஒரு மனிதன் இந்த நிலையிலிருந்து கொண்டு அறிவு ஆற்றல் வாழ்க்கை முறைகளில் முன்னேறுவதற்கான விதத்தை அறியவேண்டுமானால் அவனை இந்த நிலைக்கு அனுப்பிய பழைய நிலையைத் திரும்பிப் பார்த்தாலே போதும் என்று சொல்லுகிறேன். திரும்பிப் பார்த்தால் என்ன தோன்றும்? அதோ முதற் காலத்தில் ஒருவனுக்கும் மற்றொருவனுக்கும் சம்பந்தம்! ஓரிடத்து மக்களுக்கும் மற்றோரிடத்து மக்களுக்கும் சம்பந்தம்! ஆரம்ப முதல் நீண்ட காலம் பெருமக்கள் சம்பந்தம் அடைந்து அறிவு ஆற்றல் வாழ்க்கை முறைகளில் உயர்வு பெற்றதற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன.

அதோ பார் இடைக் காலத்தின் காட்சி! அறிவு, குணம், செயல், வாழ்க்கை முறைகளில் மக்கள் அனைவரும் பேதமின்றித் தமது தோளோடு தோள் கோத்து ஆட நினைப்பதற்கிடையில் மதத்தடை சாதித்தடைகள் குறுக்கிட்டு மறியல் செய்வது தெரிகிறது. மக்கள் தமது லக்ஷியமாகிய சம்பந்தம் இவைகளையடைய முடியாமல் தவிப்பது தெரியவில்லையா? அதோ மற்றொரு சந்தர்ப்பம்! அதோ அத்தடைகள் முறிபடுகின்றன. மக்கள் பரஸ்பரம் சம்பந்தப்படுகின்றனர்.

ஆயினும் மூடப் பழக்க வழக்கங்கள் தடிப்புப் பெற்று வருகின்றன. பார்! எனினும் இன்றைய நிலையை நீ எத்தனை தடைகளை உடைத்துக் கொண்டு வந்தடைந்தாய்! இனி முன்னேற எந்த முறையை அனுசரிக்க உத்தேசம்? தடைகளை இடறு! கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் முட்டாள்தனத்தாலும் பேதப்படாதே! உலக மக்களிடம் சம்பந்தம் செய். சம்பந்தத்தையடை! வாழ்ந்து போ.

- புதுவை முரசு, 30.3.1931