17 குறுகிய பார்வை
நீ கடலின் ஓரத்தில் அதன் அலைகளை மாத்திரம் நட்டுக் கொண்டு பார்க்கிறாய்; மகனே! பிழை உன்னுடையது. நீ நட்டுக் கொண்டு கரையில் அலைமோதுகின்றதைப் பார்க்கின்றாய்; அலைகள் அமைதியற்றுச் சீறுவதைக் கவனிக்கிறாய். உன்னுடைய பார்வையை அலையடிக்கும் குறுகிய இடம் கவர்ந்து கொண்டது. கலங்கிய அலைகள் மட்டும் உன் கண்ணுக்குத் தெரிகிறது. நீ ஒரு பகுதியை மாத்திரம் பார்க்கிறாய்; அப்பகுதி அமைதியற்றிருப்பதைப் பார்க்கிறாய். கலங்கிய நீரைப் பார்க்கிறாய். ஆழமில்லாத நீரைப் பார்க்கிறாய். மகனே! பிழை உன்னுடையது. நிலை குலைந்து கலங்கிய - ஆழமொன்று மில்லாத கடலின் அலைகளை நீ கடல் என்றே நினைப்பது எவர் பிழை? உன் பிழை. நிமிர்ந்து பார்! உன் பார்வையை விசாலப்படுத்து! கொண்ட மட்டும் பார்வையைச் செலுத்து! எத்தனை பெரிய நீர்ப்பரப்பு! ஓகோகோகோ... எவ்வளவு நீளம்! எவ்வளவு அகலம்! எவ்வளவு ஆழம்! இவை அனைத்தும் அல்லவா கடல்! ஆழத்தன்மை, விசாலத் தன்மை, இடையீடில்லாத ஒற்றுமைத் தன்மை, விடுதலைத் தன்மை, அனைத்தையும் உடைய அத்தனை பெரிய கடல், தன் ஆரவார அலைக் கூட்டத்தால் உன் கருத்தையிழுக்கும் நோக்கமுடையது! உன் பார்வை ஆரவார அலைக்கூட்டத்தில் ஆரம்பிக்கட் |