18 என்ன அற்ப புத்தி
அறிவிலே தெளிவும், நெஞ்சிலே உறுதியும், அகத்திலே அன்பினோர் வெள்ளமும் உடையவர்க்கேயன்றிச் “சுயமரியாதைக் கொள்கைகள்” பாமர மக்கட்குப் பிடிக்கமாட்டா என்பது உண்மை. பாமர மக்களை அதே நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது சுயமரியாதைக்காரர் அபிப்பிராயமல்ல. ஆதலால்தான் அவர்கள் எவ்வகைச் சிரமத்தையும் பாராது சுமார் 6 ஆண்டாக உழைத்து வருகிறார்கள். அவ்வுழைப்பினின்றும் இனியும் அவர்கள் பின்னிடப் போவதுமில்லை. மேலும் சுயமரியாதைக்காரர் பாமர மக்களிடம் தமது கொள்கைகளை எடுத்துச் சொல்லி வந்ததில் இந்நாள் மட்டும் தக்க பலன் கிடைத்திருப்பதோடு விரைவில் முழு வெற்றியும் கிடைக்கும் என்பது உறுதி. ஆனால் சுயமரியாதைப் பிரசாரம் இந்நாள் மட்டும் செய்து வந்தவர்க்கு ஒரு விஷயம் அனுபவபூர்வமாக விளங்கிவிட்டது. அதாவது பாமர மக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர் சுயமரியாதைக் கொள்கைகளின் உண்மையை அறிந்தவுடன் கள்ளங் கபடமின்றிச் செய்கையில் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள். அறிவுடையார் என்று தம்மைக் கருதியிருப்பவர்கள் அவ்வாறில்லை. மேலும் சுயமரியாதைக் கொள்கையின் உண்மையைக் கண்டறியும் திறத்தில் அறிவுடையார் என்பவர்கள் பாமர மக்கள் வரிசையில் வந்து சேர்வதும் ஓர் ஆச்சரியம். ஓர் பாமரன் சுயமரியாதைக் கொள்கையை அறியாதிருப்பதனால் கேடொன்றுமில்லை. ஆனால் அறிவுடையார் என்ப |