பக்கம் எண் :

92

22
கடவுள் வேண்டியதில்லை


பிள்ளை பிறந்தது; ஜாதகம் கணிக்க வேண்டும். அய்யருக்கு தட்சணைக் கொடுக்க வேண்டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக வேண்டும். கூப்பிடு மேற்படியானை! வை தட்சணை! பிள்ளைக்கு ஐந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை! கொடு பணத்தை! பையனுக்கு கலியாணம் - அழை அய்யரை! கொடு பணத்தை! சாந்தி முகூர்த்தம்; மேற்படி! மேற்படி; பெண்டாட்டி ஏழு மாத கர்ப்பவதி; மேற்படி! மேற்படி! பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள். உடையவர் செத்தார்; சாகும் தறுவாயில் பாவம் போக கோதானம் கொடுக்க அழை அய்யரை! செத்த பின்னும் அழை! கொடு! இதற்கிடையில் செத்துப் போனவர்க்கு இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும். அமாவாசை, திருப்பணம், இவையன்றி விதை விதைக்க, வீடுகட்ட, குடிபோக, பிறவற்றிற்கும் அழை அய்யரை! கொடு பணத்தை!

இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையா சம்மந்தியாக கிரகண தோஷத்திற்கு தருப்பைப் புல் வேண்டும். கரிநாள் தேடி எலுமிச்சம் பழம் கொண்டும். சங்கராச்சாரிய சுவாமி கட்டணமென்று ரசீது கொண்டும் அய்யர் தாமே நம் வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

தூங்கியவன் துடையில் திரித்த வரைக்கும் இலாபம். இதைப் பற்றிச் சொல்லவில்லை. ஏமாந்தவன் இருக்கும் மட்டும் அடித்துக் கொண்டு போக ஆள் உண்டு. இது