சுவர்கள், மூட்டைப் பூச்சியை நசுக்கியதைப் போல் நாறும் தெப்பக்குளம்- எல்லாவற்றிற்கும் ஏக காலத்தில் விமோசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் கிராஃபைட் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, மருதுபாண்டியர் பாலிடெக்னிக் - எல்லாவற் றிற்கும் கால்கோள் விழா நடக்கும். ஏன் எவ்வளவோ காலமாகத் தள்ளிப் போடப்பட்ட தலைநகர்ப் பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்பட்டு இராமநாதபுர மாவட்டத்தின் தலைநகர் சிவகங்கை என்று அரசு அறிவிக்கக் கூடும். ஏ, அதிர்ஷ்ட தேவதையே! பாரதப் பிரதமரைத் தென்னாட்டில் நிற்க வைக்கும் உன் கருணையே கருணை. முதலில் கர்நாடகத்துச் சின்னமகளூரில் (சிக்மகளூர்) நிற்க வைத்தாய்... இந்த முறை சேதுபதியின் செல்லமகள் ஊரில் நிற்க வைக்க வா எங்கள் பக்கம்! அதிர்ஷ்ட தேவதையே... பெரிய மனம் வைத்து வா, இந்தப் பக்கம்! 11-1-84 |