பக்கம் எண் :

  

வா, இந்தப் பக்கம்

மு.வ. ‘நாவற்’ பழங்களில் மனம் வண்டாய்க் குடையும் பள்ளிப் பருவம்.

பாளையம்பட்டி சமீன்தாரின் மாளிகைக்குப் பக்கத்தில் - மார்கோ சோப்பின் பச்சை நறுமணங் கமழும் மரநிழலில் அன்றைக்குக் கேட்ட அந்தக் குரல் இப்போதும் எதிரொலிக்கிறது: வா இந்தப் பக்கம்...!’

குறளி வித்தைக்காரனின் குரலில் மயங்கி வீதியில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லாம் ‘வந்தேன்’ என்று கூட்டம் போட்டதும் கடைசி வகுப்பில் ராஜா ஐயர் சுபாஷினி பாடம் நடத்திய அழகை வியந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்த நானும் என் நண்பன் சுந்தரமும் முண்டியடித்து நுழைந்து வேடிக்கை பார்த்ததும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் ஞாபகத்துக்கு வருகின்றன.