பக்கம் எண் :

23மீரா

ஒரு பக்கம் சினிமா ‘வா இந்தப்பக்கம்’ என்கிறது.... ஒரு பக்கம் சாராயம் வா இந்தப்பக்கம் என்கிறது. ஒரு பக்கம் லாட்டரி வா இந்தப்பக்கம் என்கிறது.

இதற்கிடையில் சிந்தனையை நோக்கி-ஒழுக்கத்தை நோக்கி-உழைப்பை நோக்கி ‘வா இந்தப்பக்கம்’ என்று நான் கூப்பிட்டால் ‘சாருக்கு எந்தப் பக்கம்’ என்று நம் பச்சைத் தமிழர்களிடமிருந்து பதில் வராமல் இருக்காது.

எதற்கு வம்பு? பேசாமல், பெரியவை பற்றிப் பிலாக்கணம் பாடாமல் சிறியவை பற்றிச் சிந்திப்போமாக.

2.11.83