பக்கம் எண் :

வா இந்தப் பக்கம் 28

பத்துப் பன்னிரண்டு கவிதைகள் கைவசம் இருந்தால் போதும்... அந்தந்த இடத்துக்குத் தகுந்தாற் போல வெட்டியும் ஒட்டியும் வெளுத்துக் கட்டிவிடலாம்.

“வரும்படி என்னை அழைத்தார் செயலாளர்
வீட்டுக்குப் போனதும்
வரும்படி எவ்வளவு எனக்கேட்டு அணைப்பாள்
என சேயிழையாள்”

என்று அவையடக்கத்திலேயே வந்த நோக்கத்தை மனந்திறந்து சொல்லி விட்டால் கை நிறையக் கிடைக்கும்.

 மணவிழாவில் கவியரங்கம்... மணிவிழாவில் கவியரங்கம்... வானொலியில் கவியரங்கம்... வள்ளுவர் கோட்டத்தில் கவியரங்கம்... பிறந்த நாள் கவியரங்கம்... நினைவு நாள் கவியரங்கம்... இப்படி எத்தனை கவியரங்கங்கள்! புலவர் பெருமான் வந்தால் பூரித்துப் போவார்.

வர்த்தக ஒலிபரப்பு, வர்த்தகக் கலை என்பதைப்போல் கவிதையும் வர்த்தகக் கவிதை ஆகக்கூடாதா என்ன?

ஓவியர்கள் பெரிய பெரிய பேனர்களில் படங்களை வரைந்து கொடுப்பதைப்போல் படிக்காசுப் புலவர் விளம்பர வாசகங்களை எழுதிக் கொடுத்துச் சம்பாதிக்கலாமல்லவா?

For men of action - Satisfaction என்று ஒரு சிகரெட் கம்பெனி விளம்பரம் செய்திருக்கிறது, கவிதை நடையில்.

அதே போல்-

ஏதோ ஒரு இஸபெல்லா சோப் என்று வைத்துக் கொள்வோம்... ‘மேனியில் குளிர்ச்சி, முகத்தில் மலர்ச்சி, உள்ளத்தில் கிளர்ச்சி’ (சே.. வார்த்தை நன்றாகத் தான் வந்து விழுகிறது. இதற்காகவே ஒரு சோப் கம்பெனி