அவர்களுக்குப் ‘பத்திரிகையில் கவிதை எழுவது எப்படி’ என்று பாடம் நடத்தலாம். பொருட் குற்றம் சொற்குற்றம் போன்றவற்றைக் களைந்து கொடுப்பதற்கு நக்கீரரையும் துணைக்கு வைத்துக் கொள்ளலாம். பிரிட்டனில் கவிதைக்காக ‘என் கவுண்ட்டர்’ (Encounter) என்னும் இதழ் வெளிவந்து இப்போது நின்று விட்டதாகத் தெரிகிறது. முன்பு கவிஞர் சுரதா காவியம், இலக்கியம், விண்மீன், சுரதா என்று தொடர்ந்து கவிதை இதழ்கள் ‘வானம்பாடி’ பரபரப்பாகப் பேசப்பட்டது. வேறு சில பத்திரிகைகளும் அவ்வப்போது தோன்றி மறைகின்றன. இவையெல்லாம் ஆயிரம் பிரதிகளுக்குக் குறைவாகவே அச்சிடப்படுகின்றன. எதிர்காலத்தில் எந்தக் கவிதைப் பத்திரிக்கையும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று அழியும் என்பது என் ஊகம். மலையாளத்தில் வாசகர்களைக் காட்டிலும் எழுத்தாளர்கள் அதிகம் என்பதைப்போல் இங்கே கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் ஒவ்வொருவரும் தன் கவிதை வெளிவந்தி ருக்கிறதா என்று பார்ப்பதற்காக வாவது பத்திரிகை வாங்கியாக வேண்டும். எனவே சோதிடத்துக்கும் சினிமாவுக்கும் தனியாக ஒரு பத்திரிகை தொடங்கும் பெரும் பத்திரிகை முதலாளிகள் நம்பிக்கை தொடங்கும் பெரும் பத்திரிகை முதலாளிகள் நம்பிக்கையோடு கவிதைக்கும் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம். மலையாளத்தில் வள்ளத்தோள் கவிதைகள் பதிவு செய்யப்பட்ட கேசட் விற்கிறதாம். தமிழில் எம்.எஸ். பாடிய பாரதி பாடல்களில் கேசட் வந்துவிட்டது. இனி புதுக்கவிதைகள் பல கேசட்டாக வெளிவரும் காலம் வரும். |