பக்கம் எண் :

வா இந்தப் பக்கம் 38

வார்த்தைகளை உதிர்த்துவிட்டு ஓடிவந்து விட்டேனே... அந்தச் சில நிமிடங்களில் கால்வைத்து விட்டானே, சண்டாளன்! ‘நல்ல சமயமடா இதை நழுவ்விடாதேயடா’ என்ற தண்டபாணி தேசிகரின் குரல் அவனுக்கு அசரீரியாகக் கேட்டதோ... தேசிகரும் அவனும் ஒரே ஊரோ... தூரத்து உறவோ...

வெள்ளைக்காரன் மகா கெட்டிக்காரன். பிரிய அவசிய மில்லாத காலணிகளைச் கண்டுபிடித்திருக்கிறானே. காலனி பள கண்டவனாயிற்றே... அதனால் தான் பூட்சை- காலணியைக் கழற்றாமல் மாட்டிக்கொண்டு தியேட்டரிலும் தேவாலயத்திலும் வீட்டிலும் வெளியிலும் சுதந்திரமாக நடக்கிறான்...

இதெல்லாம் எதற்கு ....? எல்லாக் கல்யாணங்களுக்கும் போகவேண்டும் என்ற கட்டாய மில்லை என்று என் மனைவி தடுத்தாளே... ‘மதுரையில் செருப்புத் திருட்டு அதிகம்... போவ தென்றாலும் பழைய செருப்பை போட்டுக்கொண்டு போங்கள்’ என்று சொன்னாளே... கேட்டேனா? மதுரை கோவலனை மட்டுமல்ல என்னையும் வஞ்சித்து விட்டதே! கோவலன் கொடுத்து வைத்தவன்... தலை போனாலும் அவனுக்கு ஒரு சிலப்பதிகாரம் கிடைத்ததே... யாரேனும் எனக்காக ஒரு செருப்பதிகாரம் பாடக் கூடாதா, இளங்கோவா பிறந்து வரப் போகிறார்?

மனைவி சொன்னபடி பழைய செருப்பைப் போட்டுப் போயிருந்தால் இப்படிப் புலம்பும்படி ஆகியிருக்காதே... ‘மனைவி சொல் மிக்க மந்திரமில்லை’ என்பது இப்போது தான் புரிகிறது. மந்திரி மாதிரி யோசனை சொன்னாளே... நான் மந்திரியானால்... கோவில்களில் பாதுகைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது. இல்லாவிட்டால் ஆண்டவனின் திருவடிகளைவிட்டு பக்த கோடிகளின்