விளக்குங்களேன்” என்று கேட்டாராம் ஒரு செய்தியாளர். “ஒருவன் ஓர் அடுப்பின்மேல் உட்கார்ந்திருக்கிறான் என்று வைத்துக்கொள்; அவளுக்கு ஒரு நிமிடம் ஒரு யுகமாகத் தோன்றும். ஒருவன் தன் காதலியிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு ஒரு நாள் ஒரு நிமிடதாகத் தோன்றும். சோதனைக்கு வேண்டுமானால் முன்னதை நீ செய்து பார். பின்னதை நான் செய்கிறேன்” என்றாராம் சிரித்துக் கொண்டே. பிழைகளும் அப்படித் தான். ஒருவர் செய்து அதை இன்னொருவர் சுட்டிக் காட்டினால் அதில் உள்ள இன்பம் சாமான்யமானதல்ல. ஓர் அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்தபோது, குளியல் தொட்டியிலிருந்து நிர்வாணமாக ‘யுரேகா’ என்று கத்திக்கொண்டே ஆர்க்கிமிடீஸ் ஓடினாராமே, அப்போது அவருக்கு உண்டான இன்பத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல அது... வெள்ளைத் தாமரையில் வெகுகாலமாய் வீற்றிருக்கும் கலைமகளே...! உனக்கொரு விண்ணப்பம்... எதை எதையோ கலை என்று அறுபத்து நான்கு கலைகளை ஏற்றுக் கொண்டிருக்கிறாய்... எல்லோருக்கும் இலவசமாய்ப் பேரின்பம் வழங்கும் பிழை ஓர் உன்னதமான கலை... அதை அறுபத்தைந்தாவது கலையாக ஏற்றுக்கொள்... |