தாழ்வுக்கு வந்த வாழ்வு தமிழ்நாட்டில் இப்போது ஒரு ‘ஸ்லோ சைக்கிள் ரேஸ்’ நடக்கிறது, மிக வேகமாக. பிற்பட்டோர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறத் தான் இந்த ரேஸ். சாதிச்சங்கங்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. அம்பா(ளின்) - சங்கரரின் அருட்பரிசு கிட்டதா என்று! வறுமையினாலும் மடமையினாலும் தாமாகக் கீழ்நிலை அடைந்தவர்களுக்காக-தாழ்வுற்றவர்களுக்காக அனுதாப்ப் படுகிறோம். மற்றவர்களால் காலங்காலமாய் அடிமைப்படுத்தப்பட்டுத் தாழ்த்தப்பட்டவர்களுக்காக- அல்லது பிற்படுத்தப்பட்டவர்களுக்காக-ஆத்திரப்படுகிறோம். இன்றோ சமூகத்தின் பல பிரிவினரும் ‘எங்களைப் பிற்படுத்தப்பட்டோராக்கு - தாழ்த்தப்பட்டோராக்கு!’, |