சமாதனப்படுத்தி விளக்கம் கூறி விளங்க வைத்து ‘வந்ததை வரவில் வையுங்கள்’ என்று ஸ்காலர்ஷிப் பணத்தை வாங்க வைப்படதற்குள் மாணவர்களாகிய எங்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. இந்த நவயுகத்தில் குலப்பெருமை, குடிப்பெருமை பற்றி யெல்லாம் யாருக்கும் கவலையில்லை. அந்தணர் குலமோ அரசகுலமோ எதுவானாலும் சலுகை கிடைத்தால்போதும். பிற்பட்டோர் பட்டியலிலோ அல்லது தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலோ எதிலும் இடம் பெறத் தயார். பெரும்பாலும் சோற்றுக்காக மதம் மாறியவர்கள் தானே நம்மவர்கள்... இப்போது சலுகைகளுக்காக பிற்பட்டோர் ஆகவும் தயார்! கணவன் மனைவிக்கிடையே பிணக்கு அல்லது ஊடல் ஏற்பட்டால், அதில் முதலில் நார் சரணடைகிறாரோ அல்லது தோற்கிறாரே அவர் தான் வெற்றி பெற்றவராம். அதுபோல் தங்கள் இனத்தவரை பின்தங்கியவர் ஆக்கிவிட்டால் அவர்கள் முன்னேறி விடுவார்கள் என்று நினைக்கிறார்கள் சாதிக் தலைவர்கள். 74 சதவீதம் பெரும்பான்மை இருந்தும் சிங்களவர்களிடம் சிறுபான்மைக்குரிய இருந்தும் சிங்களவர்களிடம் சிறுபான்மைக்குரிய தாழ்வு மனப்பான்மை இருக்கிறது என்று சொல்வார்கள். அதே போல் பெரும் எண்ணிக்கை உள்ள சகப் பிரிவினரிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த நம் சாதித் தலைவர்கள் படாதபாடு படுகிறார்கள். உள்ளுக்குள் தங்களுக்கு ஏதாவது பதவி கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் ஓங்கியிருக்கும். அதை வெளிக்காட்டாமல் தங்கள் சமூகத்தாரும் அரசாங்க உதவி கிடைக்க வேண்டும், சலுகை கிடைக்கவேண்டும் என்று |