ஏன்டா ரங்கா இலங்கைக்கு எப்படித் தாண்டுவே... சினிமா நடிகைகளுக்குத்தான் ரசிகர்களா? இதோ சிறுவர்கள் புடை சூழ ஓர் ஆதிமனிதனின் வாரிசு வாலாட்டியவாறு வாசலில் வந்து நிற்கிறது. இதோ எசமானன் அதை ஆட்டுவிக்கறான். “ரங்கா, ஐயாகிட்டே செஞ்சி காட்டுடா... காசு கொடுப்பாரு....... இங்கேருந்து லங்கைக்கு எப்படித் தாண்டுவே...?”- இப்படிச் சொல்லிவிட்டுக் கற்கள் உள்ள தகர டப்பாவை நாலு குலுக்குப் குலுக்கிச் சவுக்குக் குச்சியால் தரையில் ஒரு தட்டுத் தட்டுகிறான்- குரங்கு ஒரு அரைவட்டம் போட்டு ‘பல்டி’ அடித்துக் காட்டுகிறது. |