பக்கம் எண் :

வா இந்தப் பக்கம் 66

சுற்றிச் சுற்றி வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய திருக்கும்” என்று கொஞ்சம் கோபமாகச் சொன்னோம். அவர் எங்களைச் சமாதானப்படுத்தி ‘எதற்கும் நீங்கள் நகராட்சி ஆணையாளரைப் பாருங்கள்’ என்றார்.

அவரிடமும் போனோம்: புகார் மனுவை வாசித்தோம். சேலம் பக்கத்தில் ஏதோ ஒரு ஊரில் ஒரு குரங்கு மனுதனைக் கடித்துக் கொண்ற கொடுமையையெல்லாம் புட்டுபுட்டு வைத்து உடனடியாக இந்தக் குரங்குகளைப் பிடித்துக் குற்றாலத்துக்கோ, அழகர்கோயிலுக்கோ அனுப்பக் கோரினோம், அவர் சிரித்துக் கொண்டே “எங்களுக்கு நாய்களை அடிக்க மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. குரங்குகளை அடிக்கவோ பிடிக்கவோ எந்த அதிகாரமும் இல்லை. கொஞ்சம் பொறுங்கள்... நகராட்சித் தேர்தல் வரட்டும், கவுன்சிலில் வைத்து நல்ல முடிவு எடுப்போம்” என்றார்.

அவ்வளவுதான், எங்களோடு வந்த கட்சிக்காரர் ஒருவர் “இந்தத் தடவை எங்கள் கட்சி எல்லா வட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தும். குரங்கை வைத்தே குரங்கைப் பிடிப்போம். முதலில் குரங்குச் சின்னத்தில் போட்டியிட்டு நகராட்சியைப் பிடிப்போம். பிறகு அந்த மூன்று குரங்குகளையும் பிடிப்போம்” என்று ஆவேசமாகச் சொன்னார்.

நாங்கள் எல்லோரும் வானத்தைப் பார்த்தோம்.

7-12-83