உலகெங்கிலும் ஒரு கூட்டம் காத்திருக்கும்போது மனிதாபிமானின் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? பிறப்பதற்கு முன்னும் பிறந்த பின்னும் பாதுகாப்புத் தரப்படவேண்டும் என்பது ஐ.நா.வின் குழந்தை நல மேம்பாட்டுக் குறிக்கோள். அந்தக் குறிக்கோளைச் சிதைக்கும் கொலை பாதகங்களை நாம் கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்க முடியுமா? அண்டபிண்ட சராசரங்களுக்கும் ஆண்டவன் படியளக்கிறான் என்பார்கள். அவன் அளக்கிறானோ இல்லையோ, அதற்காகப் பிண்டம் படியளக்கும் சிறுமையின் நிழல் மனித குலத்தின் இதயத்தில் படிவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? 21-12-83 |