ஞாயிற்றுக்கிழமையாக் கேலிக்குரியதாக்க முயலும் சிலரை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சங்கீத வித்வான் களில் சிலர் தேங்காய் மூடிக் கச்சேரி செய்கிறார்கள், வாய்ப் பில்லாமல். அதற்காக அவர்களை ‘ஞாயிற்றுக்கிழமை சங்கீத வித்வான்கள்’ என்று சொல்வதில்லை. ஆனால் தொழில் சரியில்லாத வழக்குரைஞரை மட்டும் ஞாயிற்றுக்கிழமை வக்கீல் (Sunday lawyers) என்று கேலி பேசுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் இல்லை என்பதால் தானே இந்த அபவாதம்? இந்தப் பழிமொழியை மாற்றுவதற்காகவாவது ஞாயிற்றுக் கிழமை நீதிமன்றங்களை இயங்கச் செய்ய வேண்டும்... இதற்காக வழக்குரைஞர்கள் ‘உயிருள்ள வரை’ போராட வேண்டும். 4-1-84 |