56 | நட்பே யுதாசீ னம்பகை யென்னு மொப்புடைக் குறிப்பி னொருமூன் றாகும். | (3) |
| | |
57 | பால குமார வரச னென்னு மூவகைத் தானமு நட்பெனப் படுமே. | (4) |
| | |
58 | ஒழிந்த விரண்டு முதாசீ னம்1பகை. | (5) |
| | |
59 | பாட்டுடைத் தலைவ னியற்பெயர் முன்னெழுத்துப் பால னாக நால்வகை யெழுத்தும் வட்டமாய் முறைமையி னியலு மென்ப. | (6) |
| | |
60 | பெயர்முத லெழுத்துப் பால னாக நால்வகை யெழுத்தினும் வட்ட மாக முறையே நட்புதா சீனம் பகைவரும். | (7) |
| | |
61 | அகரந் தனக்காய நட்பென் றுரைப்பர் இகர வுகரங்க டாம். | (8) |
| | |
62 | அகரக் கெகர முதாசீன மாகு மகரக் கொகரம் பகை. | (9) |
| | |
63 | உகர மெகர மெனவிரண்டு மென்ப விகரந் தனக்காய நட்பு. | (10) |
| | |
64 | இகரக் கொகர முதாசீன மாகு மிகரக் ககரம் பகை. | (11) |
| | |
65 | உகர வெழுத்துக்கு நட்பாய் வருமே யெகர வொகரங்க டாம். | (12) |
| | |
66 | உகரக் ககர முதாசீன 2மென்ப வுகரக் கிகரம் பகை. | (13) |
| | |
67 | எகரக் கொகர மகரநட் பாகு மிகர முதாசீன மாம். | (14) |
| | |
68 | எகரந் தனக்குப் பகையென் றுரைப்ப துகர வெழுத்தென் றுணர். | (15) |
| | |
69 | ஒகர வெழுத்துக் ககர வெழுத்து மிகர வெழுத்துநட் பாம். | (16) |