பக்கம் எண் :

திரு அவதாரம்165

 

7.          "எப்பொழுது மும்பொழுதே யிச்சணமே பண்டிகைக்கெ ழுந்துபோமின்
              இப்பொழுதென் வேளையே வராததினால் இவ்விழாவுக் கிப்படியான்
              இப்பொழுதே யேகுவதில்" என்றுறைத்தே தங்கினார்க லீலியினில்
              அப்படியே சென்றனர்ச கோதரரே பண்டிகைக்கே யச்சணமே.

8.          முன்னவனை முன்தடவை சாலேமிற் கொல்லவேயூ தர்முயன்றார்
              மன்னவனோ இத்தடவை யாருமறி யாவிதமாய் வந்தனரே
              பண்டிகையிற் றற்பரன்வெ ளிப்படையா யாரெவரின் பார்வைக்சேு
              தென்படாத தாலவரைத் தேடியூரெங்கெனவி னாவினாரே

9.          அவரையேகு றித்தவரே முறுமுறுத்தார் தங்களெண்ணப் பேதகத்தால்
              அவர்மிகவும் நல்லவரென் றேபுகழ்ந்தோர் அங்கிருந்தா ரேசிலபேர்
              அவரையிகழ்ந் தார்சிலபேர் அவன்சனமே மாறவேசெய் வோனெனவே
              அவரையேகு றித்தெதுவுஞ் சொல்லவெளி யாய்ப்பயந்தார் யூதராலே.

10.         அவர்களெண்ண மிவ்விதம்பி ரிந்திருக்கப் பண்டிகையும் பாதிசெல்ல
              அவரடைந்தே யாலயமே யங்குபதே சம்புகன்றா ரங்குளோர்க்கே
              அவருபதே சஞ்செவியுற் றோரடைந்தார் ஆச்சரிய மேயதனால்
              இவர்கல்லா தோதெனினும் வேதஎழுத் தேயறிந்தா ரெவ்விதமோ.

78. ஆலய உரையாடல்; உயிர்த்தண்ணீர்.யோ. 7 : 16, 8 : 2;

வேறு

11.        என்போ தகமே என்சுய மலவே யெனையனுப் பினவரின் சுயமே
              மன்னுதந் தையரின் சித்தமே செயவே நன்மன முள்ளவ னெவனோ
              என்போ தகமே என்ணுட சுயமோ பேசுவ தெனதுட சுயமோ
              என்றவ னறிந்து கொள்ளுவா னிசமே என்றியான் சொல்கிறே னுமக்கே.

12.        தன்னுட சுயமாய்ப் பேசுவோன் தனது மகிமை நாடுவோன் நிசமே
              தன்சுய மகிமை யல்லதாய்த் தனையே யனுப்பினார் மிகிமை யையே
              உன்னிநா டுபவன் யாருமே யொருவன் நிசமுளோ னாயிருக் கிறானே
              எண்ணிநோக் கிலிதோ இன்னவ னிடமே சிறிதெனு மநீதியே யிலையே.