52. அந்நேரந் தோன்றீனளோர் கன்னியரே யங்கரத்திற் றோன்றியதே நற்றயிலம் முன்னோர்நாள் யேசுபரன் பாதமண்டை முன்னிருந்த வர்வசனங் கேட்டவளே சின்னாள்முன் வீய்ந்தவனாஞ் சோதரனைத் தான்திரும்பப் பெற்றிருந்த நன்றியினால் இந்நாள்க னஞ்செயவே யேசுவையே யிங்கபிடே கித்தாள வர்சிரசில். 53. இவ்விதமாய் மாதுமரி செய்யவுமே யிச்செலவு வீணெனவே சீடர்சொல இவ்விதவி யர்த்தமாகு தல்சரியோ யீதினைமுந் நூறுபணத் துக்குவிற்றே இவ்வளவு காசினாலே யெத்தனையோ ஏழைகள்பி ழைக்கவேகொ டுக்கலாகும் அவ்விதஞ்செய் யாதிவிதஞ் செய்ததுவோ அனாவசீக மென்றெனயூ தாசுரைத்தான். 54. இம்மாதை விட்டுவிடு என்னிடத்திற் செய்தனனே மாசிறப்பாம் நற்கிரியை உம்மோடே யேழைகளெப் போதுமுளர் உம்மிடம்யா னெப்பொழுது மேயிரேனே இம்மாதின் செய்கையிதோ என்னடக்கத் துக்குரிய தாங்கிரியை யாயினதே இம்மாநற் றைலத்தை யிம்மட்டும் என்னடக்க நாட்கெனவே வைத்திருந்தாள். 55. இந்தநறு தைலத்தின் வாசனையே யிவ்வீட்டி லெங்குமேப ரம்பினபோல் இந்தநல்வி சேடஞ்வெலு மெங்கெவணும் இவ்விடய முஞ்செலுமே யங்கெவணும் இந்தநல்ல செய்கையுமே கேட்குமிட மெங்குமிவன் கீர்த்திபிர பல்லியமாம் இந்தவிதம் பன்னிருவர் சீடருக்கே யின்னுபதே சம்புரிந்தார் யேசுபரன். 56. பெத்தனியா லாசருயிர் பெற்றதாலும் பின்னுமிரு அந்தகர்கண் பெற்றதாலும் அத்தனது கீர்த்தியெங்கு மேபரவ அந்தமாரெ ருசலையின் வீதிகளில் பெத்தரிக்க முற்றவராம் பேர்குருக்கள் லாசரையுங் கொன்றுவிட எண்ணினரே அத்தனையும் லாசரையும் பார்ப்பதற்கே யாவலொடு வந்தனர்யூ தர்திரள்பேர். |