பக்கம் எண் :

320

 

18.        பார்ப்பதில் பாரே வீய பதைப்பேன் பவியர்க் காயே
              சேர்த்திதோ அன்னோர் பாவம் தீர்ப்பே னதையேற் றேயான்
              பார்த்திபன் தந்தை சித்தம் பண்பொடு முடிப்பேன் யானே
              நேர்த்தியா யான்சு மப்பேன் நீயகல் வாயப் பாலே.

19.        சென்றனர் காவுக் குள்ளே பதினொரு சீட ரோடே
              நின்றன ரங்கோ ரிடமே நிறுத்தின ரெட்டுப் பேரை
              சென்றவண் ஜெபித்தே யானே திரும்பியே வருமட் டும்நீர்
              நின்றிரு மிவணே யென்றே விலகினார் மூயே ரோடே.

20.        மூவரும் பின்சென் றாரே முதல்வனே முன்னாற் போக
              காவினுட் செல்லும் போதே கனதுயர் கொண்டே நாதன்
              மேவிய வியாகூ லத்தாற் பதறின தன்னோர் மெய்யே
              சாவுறச் செய்யுந் துக்கம் சார்ந்ததென் னான்மம் என்றார்.

21.        பங்கமாஞ் சோத னைக்குள் பட்டிட றாதே நீவிர்
              இங்கிருந் தேஜெ பிப்பீர் விழித்தென் னோடே நீவிர்
              அங்குஜெ பிப்பேன் என்றே யகன்றுகல் லெறியும் தூரம்
              அங்கமே நடுங்கத் தாமே யவணுமே முட்டிற் றாழ்ந்தார்

22.        துக்கமா யவரே தம்மின் தூயபி தாவை நோக்கி
              உக்கிர ஏக்கத் தோடே உருகியே வேண்டல் செய்தார்
              துக்கமே தாங்கா ராயே துடித்தவர் மண்மேல் வீழ்ந்தாரே
              அக்கணந் தூதன் தோன்றி யவரை யாதரித் தான்நன்றே.

23.        இவ்வுல கெல்லோர் பாவம் மாவரு வருப்பே யீதோ
              இவ்வசுத் தம்மெல் லாமே யெப்படிச் சகிப்பேன் யானே
              இவ்வித முத்தா ரிக்க பதறுதே யென்தன் நெஞ்சே
              எவ்வித் தும்மித் தீங்கே யகற்றுவீ ரெனையே விட்டே.

24.        அப்பா பிதாவே யுந்த மருணிறை வதனந் தானே
              இப்போ கானா வண்ணம் எனக்கிதோ மறைந்தே போமே
              இப்படி யானா லையே எதுவிதஞ் சகிப்பேன் யானே
              அப்பா இரங்கும் நீவிர் அகற்றுமிக் கொடிய பாத்ரம்.