56. எழுந்தன ரவணிருந் தக்ஷணமே திரும்பின ரெருசலேம் பட்டணமே குழுமியே யிருக்கவே கண்டனரே டேரு பதின்மருங் கூடியொன்றாய் எழுந்துமே யிறைவன் மெய்மெயாயே சீமனுக் கெழில்தரி சனமளித்தார் விழுமிய செய்தியே கேட்டிவரே விண்டன ரறிந்தவை கண்டவெல்லாம். 179. பதின்மருக்கும் மற்றவர்க்குங் காட்சி. லூக். 24 : 36 - 49; யோ. 20 : 19 - 23. 57. இருந்தனர் மேல்வீட் டறையினிலே பூட்டியே யிருந்தன கதவுகளே பொருந்திய தேபய மவர்மனதில் புல்லிய யூதரின் சதியினாலே பெருந்தகை யற்புத விஷயமிதைப் பேசியே யிருக்கையி லவர்களையே பொருந்திய மயக்கமே யகற்றுதற்காய்ப் புண்ணிய னெழுந்தன ரவர்நடுவில். 58. நலமரு ளருட்பரன் வாழ்த்தினரே நற்சமா தானமு மக்கெனவே கலங்கியே பயந்தார் சீடருமே காண்பதோ ராவியென் றேநினைந்தே கலங்கே லுமதுட வுள்ளத்தில் கடுகள வையமு மவசியமில் நலமொடு தொடுமெனின் கரங்கால்கள் நான்தா னெனநீ ரறியும்படி 59. விண்டுமே யிவைகளை யவர்களுக்கே நீட்டினர் கால்கரம் வெளிப்படையாய் உண்டெனக் கெலும்பும் மாமிசமும் உண்டென நீவீ ரறிந்துளீரே உண்டெனி லெலும்பும் மாமிசமும் ஆவிக்குளதோ இதுபோலே கொண்டுமே யின்பம் விசுவசமோ கொள்ளா தாச்சரி யங்கொண்டார். 60. உண்டோ உமதிட மெதுபுசிக்க உரைக்கவே பொரித்தவோர் மீனுடைய துண்டமும் நறையுள கூட்டினுட துணிக்கையுங் கொடுத்தாற் ரேயவர்க்கே உண்டன ரிவையவர் முன்னாலே உறுதியாய் மனுடனென் றேயறிய கண்டனர் விசுவசங் கொண்டனரே கனமகிழ் வடைந்தார் யாவருமே. 61. மறுதர மவரையே வாழ்த்தினரே வளமிக நிம்மதி யுமக்கெனவே திருமறை யினிலே மோசேயுந் தீர்க்கரும் வரைந்தவை யெனைக்குறித்தே உருக்கமார் தவீதின் கீதத்தில் உவப்பொடு மெனைக்குறித் தெழுதியவை உறுதியாய் நிறைவுற லவசியமென் றுமக்கியா னுரைத்தவை யிவைகளேதான். |