பக்கம் எண் :

திரு அவதாரம்47

 

29.        இம்மைக்குறிந் தானவையாங் காரியங்கள் உமக்கினிதா யேயெடுத்து ரைத்திடினும்
              உண்மையாயே யேற்றதில்லை நீரவற்றை சிறிதுவிசு வாசமுமுண் டோவுமக்கே
              அம்மைக்குரித் தானவையாங் காரியங்கள் அருமையாக வேயெடுத்து ரைத்திடினும்
              செம்மையுற ஏற்பீரோ நீரவற்றைச் சிறிதுவிசு வாசமுமே கொள்ளுவீரோ.

30.        பரவுலகா மதிலிருந்தி றங்கியவர் பரவுலகா மங்குமேயி ருக்கிறவர்
              நரவுலகா மிதிலேவந் துதித்தவராம் மனுகுமார னென்னுமவ ரேயலாதே
              நரவுலக மெனுமிதுவாம் புவியிலுள நரனெனுமிஜ் ஜாதியராம் யாவருள்ளும்
              பரவுலக மதற்கெழுந்தோ னெவனெனிலும் இருக்கிறானோ என்றுபார்க்கில் யாருமில்லை.

31.        தன்னைவிசு வாசிப்பவன் யாரெனினுந் தான்தவறிக் கெட்டழிந்தே போய்விடாதே
              மன்னுமொரே நித்தியமாஞ் ஜீவனையே தானடைய மாறாதே யென்றுமென்றும்
              மன்னுமருள் மானுடகு மாரனுமே மண்ணிதிலு யர்த்தப்படல் மாஅவஸ்யம்
              முன்னொருகால் மோசைமுனி சர்ப்பமதை கானிலேயு யர்த்தினதாம் மாண்பதேபோல்.

32.        தேவனேதம் மொன்றொரேபே ரானவராந் திவ்யசுதன் தம்மைவிசு வாசிப்போன்
              யாவனாயி ருந்தாலும் அம்மனுடன் தானழிந்து கெட்டுமேபோ காதிருக்க
              ஆவலோடே யந்தமிலா ஜீவனையே தானடைந்தே யென்றுமென்றும் வாழ்ந்திருக்க
              மேவியேய ளித்தனரே யிச்சுதனை மேதினிலே லன்புவைத்தா ராச்சரியம்.

33.       உலகினுக்கு னுப்பினரே யன்பொடும் உன்னதர்தி ருப்பிதாத்தி ருச்சுதளை
              உலகிதனுக் காக்கினையு டும்படிய னுப்பவில்லை யச்சுதனை யுலகிதற்கே
              உலகிதுவே ரட்சையடைந் துய்வதற்க னுப்பினரு வப்பொடுமே யிவ்வுலக
              உலகினிலே யம்மகனை விஸ்வசிப்போன் உண்மையாய டைவதில்லை யாக்கினையே.

34.       அன்னவரால் ரட்சையடைந் துய்வதற்கே யன்பொடுமே வந்தவரே யிவ்வுலகில்
              அன்னவரே யுன்னதப்பி தாவினுட ஒன்றாமோர் மாவுவதை மைந்தனாவார்
              அன்னவரின் நாமமேலே விஸ்வசமே வைய்யாதோன் அன்னரிடஞ் சேர்வதில்லை
              அன்னவனின் பாடிதுவே யாக்கினைகுட் பட்டனனே யிச்சணமே நிச்சயமே.