33. வேதவாக் கியங்கள் மிக்கவின் பொடுமே அன்பொடு மாயந்தறிந் துணர்விர் போதவே யவற்றா லுங்களுக் குளதென் றெணுகிறீர் புனிதஜீ வனுமே ஆதர வளித்தே யென்தனைக் குறித்தே அரியசாட் சிதருவ ததுவே ஆதர வடைய ஜீவனு மடைய எனதிடம் வரமன மிலையே. 34. ஏற்பதே யிலையே மகிமை எதையும் மனுடரா லதுவரு மெனிலோ ஏற்றமாங் கடவு ளருளும் திடமே அணுவெனு மலையென அறிவேன் ஏற்பது மிலையே யெனையுமே யிகழ்ந்தீர் வந்துமே பிதாநா மமதில் ஏற்றுக் கொளுவீர் எவனுமே யொருவன் வந்துமே தனதுநா மமதில். 35. நாடுவ திலைநீர் பரனிட மிருந்தே வருகிற நலமிகு மகிமை நாடுவீர் மிகவே யடைகுவீர் மகிமை ஒருவரே யொருவரால் மகிமை நாடியே யிழிவாம் மனுடரால் மகிமை விரும்புமா னுடரே யெனையே நாடுவ திலையே விசுவசிப் பதுமில் நலமுற விசுவசம் கொளுமே. .36. நேர்மையார் பிதாமுன் குற்றமுமே நும்மேல் சாட்டுவே னென்னுநீர் நினையீர் நீவிரேவிசு வசிக்கும் மோசையென் பவனே நிச்சயஞ் சாட்டுவான் நிசமே நேர்மைவிஸ் வசமே மோசையென் பவன்மேல் வைத்ததும் நிச்சய மெனிலோ நேர்மையா யெனில்மே லேநீர்விசு வசமே வைப்பதும் நிச்சயம் நிசமே. 37. அவனெனைக் குறித்தே யரியசாட் சியுமே எழுதியி ருப்பது மறிவீர் அவன்திரு மறையி லறைந்ததாம் வசனம் அதைவிசு வாசியா திருப்பின் இவணிதோ உமைக்கே யிசைக்குமென் வசனம் விசுவசிப் பதுமெது விதமாம் எவனிவண் வரினும் புரிந்துமே நலங்கள் இவர்நல மடைவதெப் படியாம். 38. இவ்வித மிவர்க்கே திருக்குரு பரனே மேன்மை இன்னுரை யிசைத்தும் செவ்யபோ தகமே யுணர்ந்துசிந் தனையில் சீர்பெற மனமிலா திகழ்ந்தார் நவ்விநா தனுமே நகரதிற் றிரிந்தே நாடொறு மாலயம் புகுந்தே நவ்விவந் தவர்க்கே நலம்பல புரிந்தே நலமார் போதகம் நவின்றார். |