100கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 308 ஆம் செய்யுள்
கல்வி நலங்கூறல்

     அஃதாவது: வரைந்து கொண்டபின்னர் ஓதுதற்குப் பிரியலுறா நின்ற தலைமகன், தலைமகளுக்குக் குறிப்பாகத் தன் கருத்தினை அறிவிக்கும் பொருட்டுத் தோழியை நோக்கிக் கல்வியினது நன்மையப் பெரிதும் பாராட்டிக் கூறுதல் என்பதாம். அதற்குச் செய்யுள்,

சீரளவில்லாத் திகழ்தரு
     கல்விச்செம் பொன்வரையின்
ஆரள வில்லா வளவுசென்
     றாரம் பலத்துணின்ற
ஓரல வில்லா வொருவ
     னிருங்குழ லுன்னினர்போல்
ஏரள வில்லா வளவின
     ராகுவ ரேந்திழையே.

கல்விக் ககல்வர் செல்வத் தவரெனச் செறிகுழற் பாங்கிக் கறிவறி வித்தது

     (இ-ள்) ஏந்திழை-உயர்ந்த அணிகலன்களையுடையோய்; சீர் அளவு இல்லா திகழ்தரு கல்விச் செம்பொன் வரையின் ஆர் அளவு சென்றார்-நன்மைக்கு எல்லை இல்லாத விளங்குகின்ற கல்வியாகிய செம்பொன் மலையினது மிக்க அளவில்லாத எல்லையை அடைந்தவர்கள்; அம்பலத்துள் நின்ற ஓர் அலவு இல்லா ஒருவன் இரும்கழல் உன்னினர்போல்-பொன்னம்பலத்தின்கண் இன்பக் கூத்தியற்றி நின்ற ஓர் அலவையும் இல்லாத ஒப்பில்லாத இறைவனுடைய பெரிய திருவடிகளை அறிந்து நினைக்கும் அடியார்களைப்போல; ஏர் அளவு இல்லா அலவினர் ஆகுவர்-நன்மைக்கு எல்லையில்லாத தன்மையை உடையராகுவர் என்க.

     (வி-ம்.) சீ-ஈண்டு நலம். கல்வியாகிய பொன்வரை என்க. ஆர் அளவு-பொருந்தியதோர் அளவுமாம். ஒருவன்-ஒப்பற்றவன். இருங்கழல்-பெரிய திருவடிகள். உன்னுதல்-நினைத்தல். ஏர்-ஈண்டு நன்மை. ஏந்திழை: விளி: அன்மொழித்தொகை. செம்பொன்வரை என்றான் தூய்மையும் பெருமையும் கலங்காமையு முடைமையால். கற்றதின் மேலும் கற்க நினைக்கின்றானாகலான் ஆரளவில்லா அளவு சென்றார் என்றான். அலவு-காதம், யோசனை முதலியன. இனி ஓரலவில்லா ஒருவன் என்புழி அலவு காட்சி கருதல் உரை முதலாயின. ஆதனால் யான் ஓதற்பொருட்டு நும்மைப் பிரிந்துபோக எண்ணுகின்றேன். இதனைத் தலைவிக்குக் கூறி ஆற்றுவிப்பாயாகேன்பது குறிப்பெச்சம். இனி, கொளுவின்கண் செல்வத்தவர் என்பது