மூலமும் உரையும்109



எனவரும் திருக்குறட் கருத்தினையும் ஒப்பு நோக்குக. மழவிடையாய் என்றது இளைய மகனை உடையோய் என்றவாறு. வண்கதிர்-வளவிய கதிர். எனவே ஞாயிற்றின் கதிர் என்றாயிற்று. நீறு-துகள். கதிர் வெதுப்புதலால் துகள் பரவுகின்ற கொடுநெறி என்க. சீறூர்-குறிஞ்சிநில மாக்கள் ஊர். மரையதன்-மரை என்னும் விலங்கின் தோல். சிறுதுயில் என்றான் தமக்குத் தக்க பள்ளியும் இடமும் இன்மையால் பெரிதும் துயிலாது சிறிதே துயின்ற துயில் என்றதற்கு. இனி, துயிலும் பொழுதில் துயிலாப்பொழுது பெரிதால்கலின் சிறுதுயில் என்றான் எனினுமாம். அச்சிறு ர்துயிலுக்கு அண்டரண்டம் முழுதும் பெறினும் ஈடாகாது காண் என அவன் நலம் பாராட்டி மகிழ்வித்தபடியாம். இந்நிகழ்ச்சி உடன்போக்கு நிகழ்ந்துழி நிகழ்ந்ததாகக் கொள்க. ஞெமுங்க என்பதூஉம் மரவதளென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு-உவகை. பயன்-தலைவியை மகிழ்வித்தல்.

 
 

செய்யுள் 12

நேரிசையாசிரியப்பா

 
   
5
  குரவ மலர்ந்த குவையிருட் குழலி
யிருவே மொருகா லெரியத ரிறந்து
விரிதலைத் தோன்முலை வெள்வா யெயிற்றியர்க்
கரும்புது விருந்தெனப் பொருந்திமற் றவர்தரு
மிடியுந் துய்த்துச் சுரைக்குட மெடுத்து
10
  நீணிலைக் கூவற் றெளிபுன லுண்டும்
பழம்புற் குரம்பை யிடம்புக் கிருந்து
முடங்கத ளுறுத்த முகிணகை யெய்தியு
முடனுடன் பயந்த கடவொலி யேற்று
நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்து
15
  முயர்ந்தவின் பதற்கின் றுவம முண்டெனின்
முலைமுன் றணந்த சிறுநுதற் றிருவினை
யருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து
மதிக்குலம் வாய்த்த மன்னவ னாகி
மேதினி புரக்கும் விதியுடை நன்னா
20
  ணடுவூர் நகர்செய் தடுபவந் துடைக்கு
மருட்குறி நிறுத்தி யருச்சனை செய்த
தேவ நாயகன் கூடல்வா ழிறைவன்
முண்டக மலர்த்தி முருகவி ழிருதா
ளுறைகுந ருண்ண மின்ப
  மறைய லன்றி மற்றொன்று மடாதே.