திருக்கோவையார் 171 ஆம் செய்யுள்
நிலவு வெளிப்பட வருந்தல்
அஃதாவது:
களவொழுக்கத்தின்கண் தலைவனைப் பல்லாற்றானும் வரைவு கடாவவும் அவன் வரைதலில் கருத்தின்றிக்
களவின்பமே விரும்பி நாளும் வருபவன் ஒருநாள் இரவுக்குறிக்கண் வந்து நின்றானாக, அப்பொழுது
திங்கள் மண்டிலம் தோற்றம் செய்தது. அவன் வரவினை உணர்ந்த தோழி அவன்வர வுணராதாள்
போன்று அவன் கேட்கும் பொருட்டு நிலவு வெளிப்பாடு தலைவனைத் தாங்கள் சென்று எதிர்ப்படுதற்கு
இடையூறாதல் பற்றி வருந்துதலைக் குறிப்பாக உணர்த்துவாள் அந்நிலவினை நோக்கிப் புலந்து
கூறுதல் என்பதாம். அதற்குச் செய்யுள்:
நாகந்
தொழவெழி லம்பல
நண்ணி நடநவில்வோன்
நாக மிதுமதி யேமதி
யேநவில் வேற்கையெங்க
ணாகம் வரவெதிர் நாங்கொள்ளு
நள்ளிருள் வாய்நறவார்
நாக மலிபொழில் வாயெழில்
வாய்த்தநின் னாயகமே.
|
தனிவே லவற்குத் தந்தளர் வறியப் பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.
(இ-ள்) நவில் வேல்
கை எங்கள் நாகம் வர-பயிலப் பட்ட வேலை ஏந்திய கையையுடைய யானை போல்வனாகிய என்பெருமான்
இரவுக்குறிக்கண் ஈண்டு வாராநிற்ப; நாம் எதிர் கொள்ளும் நள்இருள்வாய்-எம்பெருமாட்டியும்
யானும் சென்று அவனை எதிர்கொள்ளுதற்குரிய செறிந்த இருளையுடைய இவ்விடையாமத்தே; நறஆர்
நாகம் மலிபொழில்வாய் எழில்வாய்ந்த நின்நாயகம்-அவ்விருலை அகற்றித் தேன் பொருந்திய
நாகமலர்கள் மிகுந்த இந்தச் சோலையின்கண் அழகுபொருந்திய நின்னுடைய தலைமைச் செயலைச்
செய்தல்; மதியே மதியே-திங்கள் மண்டிலமே நினக்குத் தகுந்த அறிவுடைய செயலாகுமோ
இன்னும்; நாகந்தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் நாகம் இது-பதஞ்சலியாகிய
பாம்பு தன்னைத் தொழும்படி அழகுடைய திருவம்பலத்தை எய்தி அங்கு இன்பக் கூத்தாடுகின்ற
இறைவனுடைய மலைகாண் இம்மலை. இதனையும் நினைவு கூருதி என்பதாம்.
(வி-ம்.)
நாகம்-நான்கனுள் முன்னது பாம்பு, இரண்டாவது மல. மூன்றாவது யானை. நான்காவது நாகமரம்.
மதி இரண்டனுள் கல்.-8
|