|
|
செய்யுள்
13
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நண்ணிய
பாதி பெண்ணினர்க் கமுத
மடுமடைப் பள்ளியி னடுவவ தரித்தும்
திருவடி வெட்டினு ளொருவடி வாகியும்
முக்கணி லருட்கண் முறைபெற முயங்கியும்
படியிது வென்னா வடிமுடி கண்டும் |
10
|
|
புண்ணிய
நீறெனப் பொலிகதிர் காற்றியும்
நின்றனை பெருமதி நிற்றொழா தேற்கு
நன்னரிற் செய்குறு நன்றியொன் றுளதால்
ஆயிரந் தழற்கரத் திருட்பகை மண்டிலத்
தோரொரு பனிக்கலை யொடுங்கிநின் றடைதவிற் |
15
|
|
கொலைநுதி
யெயிறென் றிருபிறை முளைத்த
புகர்முகப் புழைக்கை யொருவிசை தடித்தும்
மதுவிதழ்க் குவளையென் றடுகண் மலர்ந்த
நெடுஞ்சுனை புதையப் புகுந்தெடுத் தளித்தும்
செறிபிறப் பிறப்பென விருவகை திரியும் |
20
|
|
நெடுங்கயிற்
றுசல் பரிந்துகலுழ் காலை
முன்னையிற் புனைந்து முகம னளித்தும்
தந்தவெங் குரிசி றனிவந் தெமது
கண்ணெனக் கிடைத்தெங் கண்ணெதிர் நடுநாட்
சமயக் கணக்கர் மதிவழி கூறா |