122கல்லாடம்[செய்யுள்14]



வண்தேர் முன்னா என மாறுக. இனி முன்னாப் பணிவார் எனக் கிடந்தவாறே கொண்டு முன்னாக வந்து பணிவார் எனினுமாம். இப்பொருட்கு வண்தேரொடும் என உருபும் உம்மையும் விரித்தோதுக. அணி-அழகு செய்யப்பட்ட எனினுமாம். ஆலித்தல்-ஆரவாரித்தல். மா-குதிரை. மெய்ப்பாடு-உவகை. பயன்-தலைவியை மகிழ்வித்தல்.

 
 

செய்யுள் 14

நேரிசையாசிரியப்பா

 
   
5
  சலியாப் பராரைத் தமனியப் பொருப்பெணு
மொருகால் சுமந்த விண்படர் பந்தரின்
மூடிய நாற்றிசை முகிற்றுகில் விரித்துப்
பொற்சிலை வளைத்து வாயில் போக்கிச்
கருப்பணி நிரைத்த கடுக்கையம் பொலந்தார்
10
  நிரைநிரை நாற்றி நெடுங்காய் மயிரமைத்
தூதையி லலகிட் டுறைப்புய றெளித்துப்
போற்றுறு திருவ நாற்றிசை பொலிய
மரகதத் தண்டிற் றோன்விளக் கெடுப்பக்
குடத்திய ரிழுக்கிய வளைசித றியபோற்
15
  கிடந்தன வாம்பி பரந்தன மறைப்பப்
பிடவலர் பரப்பிப் பூவைப் பூவிட்
டுறவிணை நட்புக் கிளைவியப் பெய்த
முகின்முழ வதிர வேழிசை முகக்கு
முல்லை யாழொடு சுருதிவண் டலம்பக்
20
  களவலர் சுடிப் புறவுபாட் டெடுப்பப்
பசுந்தழை பரப்பிக் கணமயி லால
முல்லையந் திருமகள் கோபவாய் மலர்ந்து
நன்மண மெடுத்து நாளமைத் தழைக்க
வரிவலை முன்கை வரவர விறப்பப்
25
  போனநந் தனிநமர் புள்ளியன் மான்றேர்
கடுவிசை துரந்த கான்யாற் றெயிலி
னெள்ளின ருட்க வள்ளின மடக்கிமுன்
றோன்றின ராகலி னீயே மடமகண்
முன்னொரு காலத் தடுகொலைக் கணைந்த
  முகிலுருப் பெறுமோர் கொடுமரக் கிராத
னருமறைத் தாபத் னமைத்திடு செம்மலர்