மூலமும் உரையும்131



     (வி-ம்.) ஆண்டு இல் என்பது அந்நங்கையின் தந்தை இல்லின்கண் என்பதுபட நின்றது. அல்குவர்-சேர்வர். தீண்டில் என்பது அறிந்தோ அறியாமலோ தமது அம்பலத்து வந்து எய்தின் என்பதுபட நின்றது. தூண்டில் எடுத்த வரால்-தூண்டிலாற் பற்றி விசைத்தெடுத்த வரால் என்க. தெங்கு-தென்னை. பாண்டில்-கிண்ணம். இது தாமரை மலருக்குவமை. தாமரை: ஆகுபெயர். கீழும்-கிழிக்கும். பழனங்கள்-கழனிகள். பொது நிலங்களுமாகும். தில்லையின்வாய்ப் பழனங்கள் என இயையும். “ஆண்டு இல் எடுத்தவராம் இவர்தாம்” என்று தம்முட் கூறிப் பின் செவிலிக்குக் கூறினாராக உரைக்க. இவ்வாறு கூறாமல் செவிலி கேட்ப முழுவதூஉம் தம்முட் கூறினாராக உரைப்பினும் அமையும். மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-செவிலிக்கியல்பு கூறி அவளை மீள்வித்தல்.

 
 

செய்யுள் 15

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கல்லுயர் வரைதோட் செம்மனக் குரிசிலுங்
கல்லாத் தவறுளம் புல்லிய குழலு
மிம்மனை நிறைபுகுந் தெழின்மணம் புணரக்
கோளொடு குறித்து வரும்வழி கூறிய
மறைவாய்ப் பார்ப்பான் மகனும் பழுதிலன்
10
  சோதிடக் கலைமக டோற்றம் போலச்
சொரிவெள் ளலகரும் பழுதில் வாய்மைய
ருடறொடு குறியின் வரும்வழி குறித்த
மூதறி பெண்டிருந் தீதில ரென்ப
பெருந்திரட் கண்ணுட் பேச்சுநின் றோர்ந்து
15
  வாய்ச்சொற் கேட்டநன் மதியரும் பெரிய
ராய்மலர் தெரிந்திட்டு வான்பலி தூவித்
தெய்வம் பராய மெய்யருந் திருவினர்
கருங்கொடி யடம்புங் கண்டலுஞ் சூழ்ந்த
பனைக்குடிப் பரதவர் கலத்தொடு மறியச்
20
  சுரிமுகச் செவ்வாய்ச் சூல்வளை தெறிப்பக்
கழுக்கடை யன்ன கூர்வாய்ப் பெருங்கட்
பனைகிடந் தன்ன வுடன்முத றுணிய
வாருயிர் கவருங் காருடற் செங்கட்
கூற்றமுருத் தெழுந்த கொள்கை போல
25
  நெட்டுடற் பேழ்வாய்ப் பெருஞ்சுறவு தடியும்
வரைநிரை கிடந்த திரையுவர் புகுந்து