138கல்லாடம்[செய்யுள்16]



     யாம் நீராடுங்கால் புனலோடு ஒழுக என்க. கதி-வரவு. கதிர்த்தோள் என்றது தலைவனை ஏத்தியது. என்னை? தோழி அறத்தொடு நீங்குங்கால், “எளித்தல் ஏத்தல் வேட்கையுரைத்தல் கூறுத லுசாதல் ஏதீடு தலைப்பாடு உண்மை செப்புங் கிளவி” என்னும் இவ்வெழுவகையால் நிற்றல் வேண்டு என்பவாகலின் என்க. இனி யாம் புனல் ஒழுகக் கதியுடையான் கதிர்த்தோள் என்றது இவற்றுள் ஏதீடு என்க. கதிர்த்தோள் மருந்தாதல் நிற்க வேறு கருதும் என்றவாறு. நின்னின் மதியுடையார் இல்லை என்றது இகழ்ச்சி, நீ பெரிதும் ஐயாமையுடைய என்பது கருத்து.

     இவ்வாறு கூறவே செவிலி நீ கூறியது என்னென்று கேட்பத் தோழி அறத்தொடு நிற்றல் பயன். அம்பலத்தென அத்துச் சாரியை அல்வழிக்கண் வந்தது. ஒழுக என்னும் வினையெச்சம் கதியை யுடையான் என்னும் ஆக்கத்தை உட்கொண்ட வினைக் குறிப்புப் பெயரோடு முடியும். மெய்ப்பாடு-பெருமிதத்தைச் சார்ந்த நகை. பயன் குறிப்பினால் வெறி விலக்குதல்.

 
 

செய்யுள் 16

நேரிசையாசிரியப்பா

 
   
5
  உழைநின் றீரும் பிழையறிந் தீரும்
பழங்குறி கண்ட நெடுங்கண் மாதரு
மொன்று கிளக்க நின்றிது கேண்மி
னொருபாற் பசுங்கொடி திருநுதல் பொடித்த
குறுவெயர்ப் பொழுக்கெனக் பிறையமு தெடுக்கப்
10
  படிறர் சொல்லெனக் கடுநெஞ் சிறைப்ப
வண்டப் பொற்சுவர் கொண்ட வழுக்கை
யிறைத்துக் கழுவுவ தென்னக் கங்கைத்
துறைகொ ளாயிர முகமுஞ் சுழல
வப்பெருங் கங்கை கக்கிய திரையெனக்
15
  கொக்கின் றூவ லப்புற மாக
மாணிக் கத்தின் வளைத்த சுவரெனப்
பாணிக் குட்பெய் செந்தழல் பரப்பத்
தன்னாற் படைத்த பொன்னணி யண்ட
மெண்டிக் களந்து கொண்டன வென்னப்
20
  புரிந்த நெஞ்சடை நிமிர்ந்து சுழல
மேருவின் முடிசூழ் சூரிய ராகத்
தயங்கிய மூன்றுகண் ணெங்கணு மாகக்
கூடன் மாநக ராடிய வமுதை
யுண்டு களித்த தொண்டர்க ளென்ன