மூலமும் உரையும்147



சங்கு மணியாகவும் வளையாகவும் மெய்க்கு அணியாம் என்க. சிற்றம்பலமனைய மகளிர்; கரும்பன மென்மொழியினையுடைய மகளிர் எனத் தனித்தனி கொள்க. நீர்மையர்-தன்மையுடையோர். சிற்றம்பலத்து மன்னுங் கரும்பன மென்மொழியார் என்றும் பாடம் இதற்குச் சிற்றம்பலத்தையுடைய தில்லையினுளதாங் கரும்பு போலும் மென்மொழியை யுடையார் என்று பொருள் கூறுக. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-செவிலிக்கு உலகியல்பு கூறி மீள்வித்தல்.

 
 

செய்யுள் 17

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பழமை நீண்ட குன்றக் குடியினள்
வருந்தாது வளர்த்துங் குடங்கை துயிற்றியு
மானின் குழவியொடு கெடவரல் வருந்தியும்
பந்து பயிற்றியும் பொன்கழங் குந்தவும்
பாவை சூட்டவும் பூவை கேட்கவு
10
  முடைமை செய்த மடமையள் யானென்
றெம்மெதிர் கூறிய விம்மொழி தனக்குப்
பெருமை நோக்கிற் சிறுமைய துண்டே
செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந் தீன்ற
செம்மகள் கரியோற் கறுதியாக
15
  மகவி னின்பங் கடல்சென் றிஅவா
லன்றியும் விடிமீன் முளைத்த தரளம்
வவ்வின ரிடத்து மவ்வழி யான
திரக்கடல் குடித்த கரத்தமா முனிக்குந்
திங்கல் வாழ்குலந் தங்குவேந் தற்கு
20
  மமுதவூற் றெழுந்து நெஞ்சங் களிக்குந்
தமிழெனுங் கடலைக் காணி கொடுத்த
பொதியப் பொருப்பு நெடுமுதுகு வருந்திப்
பெற்று வளர்த்த கற்புடை யார
மணியுமா மகிழ்நர் பதியுறை புகுந்தா
25
  லுண்டோ சென்றது கண்ட துரைத்த
பள்ளிக் கணக்க ருள்ளது பெற்ற
புறமார் கல்வி யறமா மகளைக்
கொண்டு வாழுநர்க் கண்டரு கிடத்து
மவர்மன் வன்னை கவரக் கண்டிலம்
  பெருஞ்சோற்றுக் கழனி கரும்புபெறு காலைக்