156கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 300 ஆம் செய்யுள்
மகிழ்ந்துரைத்தல்

     அஃதாவது: வரைபொருட்குப் பிரிந்து வந்த தலைவன் தலைவிக்கு அருங்கலம் விடுத்தற்கு மணமுரசொடு வந்தானாக, அம் முரசொலி கேட்ட தோழி அதுகாறும் தலைவி அவன் வழங்கிய தழைகளை வாடாமல் வைத்து அத்தழையே பற்றுக்கோடாக ஆற்றியிருந்தாளெனத் தன்னுள்ளே மகிழ்ந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்,

இருந்துதி யென்வயிற் கொண்டவன்
     யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி
     யோந்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி
     முனலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
     சிலம்பன் அருந்தழையே.

மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை நன்னுதற் றோழி தன்னின் மகிழ்ந்தது.

     (இ-ள்) சிலம்பன் அருந்தழை-எம்பெருமான் வழங்கிய பெறுதற்கரிய தழைகள்; முன்னரி வலம்செய்து-அவன் எம்பெருமாட்டியோடு முன்னர்த் தீயை வலம்கொண்டு; இடப்பால் அருந்துதி காணும் அளவும்-வதிட்டனுக்கு இடப்பக்கத்தே தோன்றும் அருந்ததியாகிய விண்மீனைக் காணுமளவும்; திசைமுகன் மாற்கு அரியோன்-தனது முடியையும் அடியையும் தேடிச்சென்ற நான்முகனுக்கும் திருமாலுக்கும் காண்டற்கு அரியோனாய் இருந்து; என்வயின் இருந்துதி கொண்டவன்-எளியோனாகிய என்னையும் ஆட்கொண்டு எனது பெரிய வாழ்த்தினை என்னிடத்தே உண்டாக்கிக் கொண்டவனும்; யான் எப்பொழுதும் உன்னும் மருந்து-எளியோன் எபொழுதும் நினைக்கும்படி சுவையுடைத்தாயதொரு மருந்தும் ஆகிய கூத்தப்பெருமானுடைய; தில்லை வாழ்த்தினர் போல்-திருத்தில்லையை வாழ்த்திய அடியார்போல; இருந்து திவண்டன-வாடாதிருந்து விளங்கின; அத்தழை பற்றுக்கோடாகவன்றோ எம்பெருமாட்டி இதுகாறும் ஆற்றியிருந்ததும் என்பதாம்.

     (வி-ம்.) திசைமுகன் மாற்கரியோன் என்றது “பிரமன் மாற்கரியோன்” என்று நிகண்டு முதலியவற்றிற் கூறப்படும் சிவன்பெயர்