|
|
செய்யுள்
18
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
குங்குமக்
கோட்டல ருணங்கலர் கடுக்கும்
பங்குடைச் செங்காற் பாட்டளி யரிபிடர்க்
குருவிற் றோய்ந்த வரிகெழு மரகதங்
கல்லெனக் கிடப்பச் சொல்லிய மேனித்
திருநெடு மாலிஉக் கொருவிசை புரிந்து |
10
|
|
சோதிவளர்
பாக மீந்தரு ணித்தன்
முனிவ ரேமுற வெள்ளியம் பொதுவின்
மனமுங் கண்ணுங் கனியக் குனிக்கும்
புதிய நாயகன் பழமறைத் தலைவன்
கைஞ்ஞின் றவன்செங் கால்கண் டனர்போல் |
15
|
|
விளக்கமும்
புதுமையு மளப்பில் காட்சியும்
வேறாப் பெடுத்துக் கூறுவது நீக்கமு
மறிவோர் காணுங் குறியா யிருந்தன
விருந்திண் போர்வைப் பிணிவிசி முரச
முன்ன மெள்ளினர் நெஞ்சுகெடத் துவைப்ப |
20
|
|
மணங்கொள்
பேரணி பெருங்கவின் மறைத்ததென்
றெழுமதி குறைத்த முழுமதிக் கருங்கயல்
வண்டு மருவி யுண்டு களியாது
மற்றது பூத்த பொற்றிகழ் தாமரை
யிரண்டு முகிழ்செய்து நெஞ்சுறப் பெருகும் |
25
|
|
வற்றா
மேனி வெள்ளத்துண் மறிய
நுனித்தலை யந்தனர் கதழெரி வலர்த்துச்
சிவந்த டாய்தோறும் வெண்பொரி சிதறச்
செம்மாந்து மணந்த வளிய கூரெரி
மும்முறை சுழன்று தாயருண் மகிழ |