திருக்கோவையார் 47 ஆம் செய்யுள்
பிறைதொழு கென்றால்
அஃதாவது:
தலைவியின் வேறுபாடு கண்டு ஆராயுந்தோழி மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
ஆராயுங்கால் மேற்றிசையில் பிறை தோன்றிற்றாக. அதனைத்தான் தொழுது நின்று இதனை
நீயும் தொழுவாயாக! எனக் கூறித் தலைவியினது மனநிலை அறியா நிற்றல். அதற்குச் செய்யுள்:
மைவார்
கருங்கண்ணி செங்கரங்
கூப்பு மறைந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறுபிழைக்கே.
|
பிறைதொழு கென்று பேதை மாதரை நறுநுதற் பாங்கி நாண நாடியது.
(இ-ள்) மறந்தும்
பொய் அவ்வானவரில் புகாது-மறந்து பொய்ம்மையையுடைய அந்தத் தேவர்களிடத்தே செல்லாமல்;
தன் பொன்கழற்கே அடியேன் உய்வான்புக-தன்னுடைய பொன்னானியன்ற கழலையுடைய திருவடிகளிலே
அடியேன் உய்தற்பொருட்டுத் தஞ்சம்புகா நிற்ப; ஒளிர் தில்லை நின்றோன் சடைமேலது
ஒத்து-விளங்கும் திருத்தில்லைச் சிற்றம்பலத்தின்கண் அடியேன் கண்ணாற் காணூம்படி
நின்ற இறைவனுடைய சடையின்கண்ணதாகிய பிறையை ஒத்து; செவ்வான் அடைந்த பசுங்கதிர்
வெள்ளைச் சிறு பிறைக்கு-செக்கர் வானை அடைந்த புதிய ஒளியையுடைய வெள்ளையாகிய சிறிய
பிறைக்கு; மைவார் கருங்கண்ணி-மையையுடைய நெடிய கரிய கண்ணினையுடையோய்; செங்கரம்
கூப்பு-நின்னுடைய சிவந்த கைகளைக் கூப்பித் தொழுவாயாக என்க.
(வி-ம்.) கருங்கண்ணி
செங்கரம் என்புழிச் செய்யுளின்பமுணர்க. மறந்தும் என்றது ஈண்டு அறியாதும் என்னும்
பொருட்டாய் நின்றது. மற்று: அசைநிலை. மற்றை என்பதும் பாடம். இதற்கு அவனல்லாத
பொய்வானவர் என்று கொள்க. இனம் அல்லராயினும் இனமாக உலகத்தாராற் கூறப்படுதலின்
அவ்வாறு கூறினார். வானவர்-ஈண்டுத் திருமால் முதலியோர் மூவரென்றே எம்பிரானொடும்
எண்ணி என்பதூஉம் அக்கருத்தே பற்றி வந்தது. பிறர் கூறும்
|