மூலமும் உரையும்165



பெருமை அவர்க்கின்மையில் பொய்யானவர் என்றார். எனக்குப் பொறியுணர்வல்லது இன்மையின் கண்கவரும் திருமேனி காட்டி என்னைத் தன் வயப்படுத்தான் என்னும் கருத்தால் உய்வான் புகத்தில்லை நின்றோன் என்றார். சட, செக்கர் வானத்திற்குவமை. பெய்ப்பாடு: பெருமிதம். பயன்: புணர்ச்சியுண்மை அறிதல்.

 
 

செய்யுள் 19


நேரிசையாசிரியப்பா

 
   
5
  நெடுவளி யுயிர்த்து மழைமத மொழுக்கி
யெழுமலை விழுதலை புடைமணி யாக
மீன்புகார் நிறைந்த வான்குஞ் சரமும்
வால்பெற முளைத்த கூன்கோ டானும்
பேச நீண்ட பன்மீ னிலைஇய
10
  வானங் கடலிற் றோணிய தானுங்
கொழுநர்க் கூடுங் காம வுததியைக்
கரைவிட வுகையு நாவா யனுங்
கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவி
லைங்கணைக் கிழவன் காட்சியு மகிழ
15
  விழைத்து வளைத்த கருப்புவில் லானு
நெடியோன் முதலாந் தேவர் கூடி
வாங்கிக் கடைந்த தேம்படு கடலி
னமுதுடன் றோன்றிய வுரிமை யானு
நின்றிரு நுதலை யொளிவிசும் புடவி
20
  லாடிநிழற் காட்டிய பீடது வானுங்
கரையற வாணியு மானக் கலனுட்
டலைபெற விருந்த நிலைபுக ழானு
மண்ணக மனைத்து நிறைந்தபல் லுயிர்கட்
காயா வமுத மீகுத லானும்
25
  பாற்கட லுறங்கு மாயவன் போலத்
தவள மாடத் தகன்முதுகு பற்றி
நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியுங்
கூடைவீற் றிருந்த நாடகக் கடவுள்
பொற்சுடர் விரித்த கொத்தலர் கொன்றையுந்
  தாளியு மறுகும் வாலிழை யெருக்கமுங்
கரந்தையும் வன்னியு மிடைத்தசெஞ் சடையி