திருக்கோவையார் 335 ஆம் செய்யுள்
ஆற்றாமை கூறல்
அஃதாவது:
பொருளீட்டுதற் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லுதற்குக் கருதும் தலைவனுடைய கருத்தினைக்
குறிப்பாலுணர்ந்த தோழி தலைவியினது பிரிவாற்றாத் தன்மையை அவனுக்குக் கூறா நிற்றல்
என்பதாம். அதற்குச் செய்யுள்,
வானக் கடிமதில் தில்லையெங்
கூத்தனை ஏத்தலற்போற்
கானக் கடஞ்செல்வர் காதல
ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
இனிச்சென்று தேர்பொருளே.
|
ஏழை யழுங்கத் தோழி சொல்லியது
(இ-ள்) வானக்கடி
மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர்போல்-முகிகளையுடைத்தாகிய காவலையுடைய மதிலாற்
சூழப்பட்ட தில்லையின்கண் எழுந்தருளியுள்ள எம்மிறைவனாகிய கூத்தப் பெருமானை வாழ்த்தாதார்
போல; காதலர் கானக்ம் கடம் செல்வர் என்ன-நம்பெருமான் காட்டினையுடைய பாலைநிலத்தில்
செல்வர் என்று யான் செல்லும் அளவிலே; கதிர் முலைகள் மானக்கனகந்தரும்-ஒளியையுடைய
எம்பெருமாட்டியின் முலைகள் கொண்டாடப்படும்பொன்னைத் தாரா நின்றன; மலர்க்கணகள்
முத்தம் வளர்க்கும்- மலர்போலும் அவளுடைய கண்கள் முத்துக்களைப் பெருக உண்டாக்கா
நின்றன; ஆதனால்; தேன் நக்க தார்மன்னன் இனிச் சென்று தேஎர் பொருள் என்-தேனோடு
மலர்ந்த மலர்மாலையினையுடைய மன்னவனாகிய எம்பெருமான் இனித் தொலைவிலே சென்று தேடுதற்குரிய
பொருள் யாதோ என்பதாம்.
(வி-ம்.) வானம்:
ஆகுபெயர்; முகில். கடி-காவல். எம்மிறைவனாகிய கூத்தன் என்க. ஏத்தலர்-வாழ்த்தாதார்.
கானம்-காடு. மானக்கனகம் என்பதற்கு மாற்றாணிப்பொன் என்றுரைப்பின்னுமாம். இது முன்னிலைப்புறமொழி.
மன்னன் என்பது இயல்புவிளி எனினுமாம். அமையும். கடம் செல்வர் என்னுமளவிலே எம்பெருமாட்டியின்
முலைமேல் பொன்னொறப் பசலை பாய்ந்தது; கண்கல் முத்துப் போன்று நீர்த்துளி சிந்தின
என்பது கருத்து. இனி நின் காதலியின் முலையும்
|