கண்ணும் நீ பொருள் தேடப்போவாய் என்னுமளவிலே நிரம்பப் பொன்னும் முத்தும் வழங்கின, இவற்றினும் சிறந்த பொருள் வேறியாது என்றும், நின்பிரிவினைச் சொல்லுமளவிலே பசலை பூத்துக்கண்ணீர் உருகுபவள் நீ பிரியின் இறந்துபடுதல் ஒருதலை; அங்ஙனமாயின் நீ தேடும் பொருள் எற்றிற்காம் என்றும் இருபொருள் தோன்றுதலுணர்க. நீ செல்லின் தலைவி ஆற்றாமையால் இறந்துபடுவள் என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு-இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்-செலவழுங்குவித்தல்.
|
|
செய்யுள்
20
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பொருப்புமலி தோலினு நெருப்புமிழ் வேலினுஞ்
செந்திரு மகளைச் செயங்கொண் மங்கையை
வற்றாக் காதலிற் கொண்ட மதியின்றிக்
கலவலர் தூற்றத் தளவுகொடி நடுங்க
வேயுளம் பட்டுப் பூவையின்கண் கறுக்கத் |
10
|
|
தண்டா
மயல்கொடு வண்டுபரந் தரற்றக்
காலங் கருதித் தோன்றிகை குலைப்பத்
துன்பு பசப்பூருங் கண்ணிழ றன்னைத்
திருமல ரெடுத்துக் கொன்றை காட்ட
விறைவளை நில்லா தென்பன நிலைக்கக் |
15
|
|
கோடல்
வளைந்த வள்ளல ருகுப்பக்
கண்டுளி துளிகுஞ் சாயாப் பையுளைக்
கூறுபட நாடி யசையொடு மயங்கிக்
கருவிளை மலர்நீ ரருகுநின் றுகுப்பப்
பேரழல் வாடை யாருயிர் தடவ |
20
|
|
விளைக்குங்
கால முளைத்த காலை
யன்புஞ் சூளு நண்புநடு நிலையுந்
தடையா வறிவு முடையோய் நீயே
யெழுந்து காட்டிப் பாடுசெய் கதிர்போற்
றோங்கி நில்லா நிலைப்பொருள் செய்ய |
25
|
|
மருங்கிற்
பாதி தருந்துகில் புனைந்தும்
விளைவய லொடுங்கு முதிர்நெல் லுணவினுந்
தம்மில் வீழுநர்க் கின்பமென் றறிந்துந்
தண்மதி கடுஞ்சுடர் வெவ்வழல் கண்வைத்
தலவாப் பாத மண்பரப் பாகத் |
|