திருக்கோவையார் 68 ஆம் செய்யுள்
வேறுபடுத்துக் கூறல்
அஃதாவது:
மெய்யினும் பொய்யொனும் வழிநிலை பிழையாது தலைவியை ஆராய்கின்ற தோழி இப்பிறையைத்
தொழுவாயாக என அவள் தொழாது தலைகுனிந்து நணி நிலங்கிளையாநிற்ப. அதுகண்ட த்ழி,
பின்னும் இவள்வழி ஒழுகி இதனை அறிவோம் என்று கருதி நீ போய்ச் சுனையாடி வாவென்ன
அவளும் அதற்கிஅந்து சென்று தலைவனைத் தலைபட்டு அளவளாவி இருந்துவர, அத்தலைவியின்
மெய் வேறுபாடு கண்டு அவளை வரையர மகளாகப் புனைந்து வேறுபடுத்துக் கூறுதல் என்பதாம்.
அதற்குச் செய்யுள்:
அக்கின் றவாமணி
சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வானர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாறணங் கேயிணங்
காகு முனக்கவளே.
|
வேய்வளைத் தோளியை பாடுகண் டாய்வளைத் தோழி யணங் கென்றது.
(இ-ள்) அக்கின்
தவா மணி-அகாகிய கெடாத மணிகள்; சேர் கண்டன் அம்பலவன்-பொருந்திய மிடற்றையுடையவனாகிய
திருச்சிற்றம்பல வானனுடைய; மலையத்து இக்குன்றவாணர்-மலயத்தின்கண் வாழ்வோராகிய
இந்தக் குன்றக் குறவருடைய; கொழுந்து செழும் இ தண் புனம் உடையாள்-மகளாகிய வலவிய
இந்தக் குளிர்ந்த தினைப்புனம் காவலுடையவள்; அ குன்றம் ஆறு-அதோ தோன்றுகின்ற மலையின்
கண்ணின்றும் வருகின்ற ஆற்றில்; அமர்ந்து ஆடச் சென்றாள்-விரும்பி நீராடப் போயினாள்;
அங்கம் அவ் அவையே ஒக்கின்றவாறு-நின் உறுப்புகள் அவள் உறுப்புகளாகியவற்றையே ஒக்கின்றபடியால்;
அணங்கே-வரையர மகளாகிய என் தெய்வமே; அவள் உனக்கு இணங்கு ஆகும்-அவள் உனக்குப் பெரிதும்
ஒப்பாகுவாள்காண். ஆதலால் அவளைக் கண்டு செல்வாயாக என்பதாம்.
(வி-ம்.) அக்கின்
மணி தவாமணி எனத் தனித்தனி கூட்டுக. அக்கின்மணி என்புழி இன் அல்வழிக்கண் வந்த
சாரியை. அக்காகிய மணி என்க. தவா-கெடாத. எனவே நல்லமணி என்பதாயிற்று. மலையத்துக்
குன்றம் என்புழியும் அத்து அல் வழிக்கண் வந்த சாரியை
|