மூலமும் உரையும்195



எனக்கொண்டு இம்மலையக் குனவாணர் எனினுமாம். கொழுந்து என்றது குழந்தை என்னும் பொருள்பட வரும் மரபுச்சொல். இச்சொல்லே கொழுந்தை குழந்தை எனப் பிற்காலத்தே மருவிற்றென்க. அணங்கு-தெய்வம். வரையர மகளாகிய தெய்வம் என்றவாறு. இணங்கு-ஒப்பு. ஆதலால் அவளைக் கண்டு செல்வாயாக என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு: மருட்கை. பயன்: மெய்யுணர்தல்.

 
 

செய்யுள் 22

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கண்ட காட்சி சேனின் குறியோ
வென்னுழி நிலையா வுள்ளத்தி மதியோ
சூர்ப்பகை யுலகிற் றோன்றினர்க் கழகு
விதிக்கு மடங்கா வென்பது விதியோ
வென்னுடைக் கண்ணு முயிரு மாகி
10
  யுண்ணக ழின்ப முள்ளா ளொருத்தி
மலைக்குஞ் சரத்தின் கடக்குழி யாகி
நெடுமலை விழித்த கண்ணே யாகி
யம்மலைத் திருநுதற் கழியா தமைந்த
வெளைகொள் சிந்துர நல்லமணி யாகித்
15
  தூர நடந்த தாளெய்ப் பாறி
யமுதொடு கிடக்கு நிறைமதிப் பக்க
மொருபாற் கிடந்த துணைமதி யாகி
யருவி வீசப் பறவைகுடி போகி
விண்டுனற வொழுக்கும் பாண்டி லிறாலா
20
  யிளமை நீங்காது காவல்கொள் ளமுதம்
வரையர கமாதர் குழுவுட னருந்த
வாக்கியிடப் பதித்த வள்ளமு மாகி
டிடைவளி போகாது நெருங்குமுலைக் கொடிச்சியர்
சிறுமுகங் காணு மாடி யாகிச்
25
  சிறந்தன வொருபுனை யிம்மலை யாட
வளவாக் காதல் கைமிக் கணைந்தன
ளவளோ நீயா என்கண் குறித்த
தெருமர றந்த வறிவுநிலை கிடக்கச்
சிறிதுநின் குறுவெயர் பெருமணங் காறி
  யொருகன னிலைக்க மருவுதி யாயி
னிந்நிலை பெயர வுன்னுமக் கணத்திற்